எம்பி தேர்தல்ல தனியா நிற்க முடியுமா? ‘பல்ஸ்’ பார்க்கும் எடப்பாடி! முடிச்சு போடும் முத்துநகர் ‘மாஜி’!
தூத்துக்குடி : மக்களால் ஏற்றுக் கொள்ளபட்டு அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி அன்று ஒன்று என்றால் அது அதிமுக தான். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, திமுகவாகவும் இருந்தாலும் கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை சந்திக்க தயாரா என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 11.29 லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து திறந்து வைத்து பள்ளி வளாகத்தை ஆய்வு செய்தார்.

கடம்பூர் ராஜு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு," கல்வியின் வளர்ச்சிக்காக பள்ளியின் கட்டமைப்பு வசதிக்காக சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் 25 லட்ச ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திட்டத்தை கொண்டு வந்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை அரசு நிகழ்ச்சிக்கு அழைப்பதும் இல்லை. மதிப்பதில்லை. இது கண்டனத்திற்குரியது. தவறான முன்னுதாரணமாக இருந்து வருகிறது..

அதிமுக தான்..
மக்களால் ஏற்றுக் கொள்ளபட்டு அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி அன்று ஒன்று என்றால் அது அதிமுக தான். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, திமுகவாகவும் இருந்தாலும் கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை சந்திக்க தயாரா. தனியாக நின்று 37 இடங்களில் வெற்றி பெற்ற சரித்திரத்தை உருவாக்கிய கட்சிதான் அதிமுக. செய்திகளுக்காக அரசியல் செய்யக்கூடிய கட்சி நாங்கள் இல்லை.

திமுக அரசு
தற்போதைய திமுக அரசு கையாளாகாத அரசு அதிமேதாவிகளை வைத்துக்கொண்டு நிதி வருவாயை பெருக்க எந்த ஒரு கட்டமைப்பு செய்யாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் திமுக அரசு உள்ளது. இந்த அரசின் கையாலாகாத தனம் காரணமாகத்தான் பால் விலை தொழில் வரி மின்கட்டண உயர்வு விரைவில் பல்வேறு கட்டண உயர்வு அறிவிப்பு வர உள்ளது. திமுக என்றைக்கு ஆட்சிக்கு வந்தாலும் ஆணவத்திலே எதிர்க்கட்சியை மட்டும் அல்ல மக்களை ஏளனமாக பேசக்கூடியது கண்கூடாக பார்க்கப்படுகிறது.

40 தொகுதியிலும் வெற்றி
ஓசி பஸ்ஸில் மக்கள் பயணம் செய்கிறார்கள் என்று அமைச்சர் கூறிய பேச்சுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்த பின்பே தனது வருத்தத்தை தெரிவிக்கிறார் அமைச்சர். மக்களைப் கொச்சைப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விலையில்லா திட்டம் என்று கொண்டு வந்தார்கள் இலவசம் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தவில்லை. அதிமுகவில் பிரிவே இல்லை அனைவரும் ஒன்றுபட்டு தான் இருக்கிறோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா திமுக 40 இருக்கும் 40 வெல்வோம் அதற்கு தயாராக உள்ளோம்" என்றும் தெரிவித்தார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications