புது வீட்டுக்கு மாறியும் விடாத காதல்.. பழைய வீட்டில் காதலனுடன் மனைவி உறவு.. வெட்டிக் கொன்ற கணவர்
Recommended Video

கோவில்பட்டி: புத்தாண்டு தினத்தை கள்ளக்காதலனுடன் கொண்டாடியதால் மனைவியை அடித்து கொன்றதாக கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவில்பட்டி நடராஜபுரம் 5-ஆவது தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (28). ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மனைவி விமலா (20). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். விமலாவுக்கும் அதே பகுதியைச் சேர்நத வெல்டிங் பட்டறை தொழிலாளி குமாருக்கும் (20) இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
இது மாரிமுத்துவின் காதுகளை எட்டியது. இதையடுத்து விமலாவிடம் நல்லவிதமாக மாரிமுத்து புரிய வைத்து புத்தாண்டு முதல் அனைத்தையும் மறந்து நாம் புது வாழ்க்கை வாழ்வோம் என கூறியுள்ளார். இதற்கு விமலாவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

உல்லாசம்
இதையடுத்து அந்த வீட்டை காலி செய்து விட்டு அதே பகுதியில் வேறொரு வீட்டுக்கு மாரிமுத்து- விமலா தம்பதி குடித்தனம் வந்துள்ளனர். ஆனால் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பிறகு விமலா, குமாருடன் பழைய வீட்டுக்கு சென்று அங்கு அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை பார்த்த கணவர் மாரிமுத்து விமலாவை அடித்து கொன்றுவிட்டார்.

பரபரப்பு
இதையடுத்து அவரை கோவில்பட்டி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில், குமாருடன் விமலா பல முறை உறவு கொண்டுள்ளார். இதெல்லாம் மறந்துவிட்டு குழந்தைகளின் நலனுக்காக பொறுத்துக் கொண்டு அவருக்கு புத்திமதி சொன்னேன்.

உல்லாசம்
ஆனால் அவர் கேட்கவில்லை. புதிய வீட்டுக்கு வந்த பிறகு புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் விமலாவை காணாது அதிர்ச்சி அடைந்தேன். அப்போது தேடி பார்த்தபோது விமலா பழைய வீட்டுக்கு சென்றது தெரியவந்தது. நேராக அங்கு போனேன். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்தனர்.

தலைமறைவு
இதனால் ஆத்திரத்தில் இரும்புக் கம்பியால் இருவரையும் ஓங்கி அடித்தேன். இதில் விமலா உயிரிழந்துவிட்டார். குமார் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து நான் போலீஸில் சரணடைந்துவிட்டேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து மாரிமுத்துவை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு கோவில்பட்டி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். தலைமறைவாக உள்ள குமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications