பெரிய “இவன்” மாதிரி.. அண்ணாமலை மண்டையில ஏறல! தூத்துக்குடி பாஷையில் கொந்தளித்த அமைச்சர் கீதா ஜீவன்
தூத்துக்குடி: அழுகிய முட்டைகள் தொடர்பாக பல முறை விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டுவிட்டதாகவும் அண்ணாமலை தலையில் எதுவுமே ஏறவில்லை எனவும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 141வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் , மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் , எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அழுகிய முட்டைகள் தொடர்பாக ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளேன். அண்ணாமலை 6 இடங்களைதான் பார்த்துள்ளார். 50 இடங்களில் கூட அழுகிய முட்டை பிரச்சினை இருக்கலாம்.

அழுகிய முட்டைகள்
அழுகிய முட்டைகளை ஒதுக்கி வைத்துவிட்டுதான் முட்டை பயன்படுத்தபடுகிறது. வேண்டும் என்றே ஒதுக்கி வைக்கப்பட்ட அழுகிய முட்டைகளை தனது கட்சியினர் மூலமாக போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு கொடுத்தாக அண்ணாமலை கூறுகிறார். அழுகிய முட்டைகளை ஒப்பந்தக்காரர்களிடம் கொடுத்து மாற்றி விடுவோம்.

அண்ணாமலைக்கு பதிலடி
அது தான் நடைமுறை என்றும் இது பற்றி நான் பலமுறை அறிக்கை விட்டுவிட்டேன். அவருக்குத்தான் மண்டையில் ஏறவில்லை. 'பெரிய இவன்.. தான்' என்று இருக்கிறவன் கிட்ட ஒன்னும் சொல்ல முடியாது. பணம் மதிப்பு இழப்பு குறித்து தவறான கொள்கை என்று எல்லா எதிர்க்கட்சிகளும் தெரிவித்தன. பணம் மதிப்பிழப்பு காரணமாக பொருளாதார ஏற்றம் பெறவில்லை மக்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர்.

இடஒதுக்கீட்டில் வந்தேன்
ஆனால் மத்திய அரசுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி தான் இருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணாமலை தன்னுடன் ஒப்பிட்டு பேசுகிறார். அண்ணாமலை இன்றைக்கு அரசியலுக்கு வந்தவர். ஆனால் எங்கள் தலைவர் அரசியலுக்கு வந்து பல காலம் ஆகிவிட்டது. நானே கட்சியில் இட ஒதுக்கீட்டில் தான் வந்தேன். வாரிசு அடிப்படையில் வரவில்லை.

ஸ்டாலினை மோடியுடன் ஒப்பிடலாம்
இட ஒதுக்கீட்டில் உள்ளே வருகிறோம். அதன் அடிப்படையில் அரசியலில் நீடிக்கிறோம். எங்கள் தலைவரை மோடியுடன் ஒப்பிட வேண்டும் இவருடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அண்ணாமலை போன்று நாங்களும் என்ன சட்டை போடுகிறார் என்று கேட்க முடியும். எங்கள் தொண்டர்களும் பயந்தவர்கள் கிடையாது துணிந்தவர்கள் தான். கொள்கை ரீதியாக இருப்பவர்கள் எங்கள் தொண்டர்கள்.

சவுடலாக பேசுகிறார்
அண்ணாமலை அவருடைய தொண்டர்களுக்கு ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக சவுடாலாக பேசி செல்கிறார். கிட்டத்தட்ட அண்ணாமலை பேச்சை பார்க்கும்போது சில ஆட்களை பார்த்த மாதிரி இருக்கிறது. விரைவில் அதை மக்கள் புரிந்து கொள்வார்கள். கடற்கரை பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது. ஆகையால் தான் மரப்பாலம் அமைக்கப்பட்டது.

மெரினா மரப்பாலம்
ஆட்சியில் இருந்தால்தான் அரசின் விதிமுறைகள் எல்லாமே தெரியும். அதை கடைபிடிக்க முடியும். மரத்தையே புயல் அடிக்கும் போது. மரப்பாலம் எம்மாத்திரம். அதில் எவ்வித முறைகேடும் இல்லை. அது மாற்றுத்திறனாளிகளுக்காக செய்தது. எதிர்க்கட்சிகள் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த குற்றச்சாட்டுகளை கூறுவார்கள்." என்றார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications