புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உதயமாகிறது.. நவம்பர், டிசம்பரில் நகராட்சி தேர்தல்.. கே.என்.நேரு
தூத்துக்குடி: வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார், எனவே தற்போது அதற்கான அடிப்படைப் பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களிடம் கூறினார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, சமூக நலன் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு
இதில் மீளவிட்டான் பகுதியில் உள்ள சி.வா. குளத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் இங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர் தொடர்ந்து தூத்துக்குடி நகரின் மத்தியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் பழைய பேருந்து நிலைய கட்டிட பணிகளை பார்வையிட்டனர்.

மெதுவாக நடந்தது
தொடர்ந்து இந்த பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்த அமைச்சர் கே என் நேரு பணிகளை ஆய்வு செய்தார். விரைவாக இந்த பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டேன் . தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டாலும், கடந்த ஆட்சி காலத்தில் கண்டுகொள்ளாமல் விட்ட காரணத்தால், பணிகள் மெதுவாக நடைபெற்றது. தற்போது இந்த பணிகள் துரிதப்படுத்தப்படும். இன்னும் மூன்று நான்கு மாதங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவு பெறும்.

விரைவில் நகராட்சி தேர்தல்
இதுபோல் தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பழைய பேருந்து நிலையம் கட்டிட பணிகளை விரைந்து முடிவு முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அடிப்படை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நவம்பர் டிசம்பர் மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பது நடைபெறும்.

மாநகராட்சிகள்
திமுக தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சில பகுதியில் உள்ள நகராட்சிகள் மாநகராட்சி ஆகும். சில பகுதியில் உள்ள பேரூராட்சிகள் நகராட்சிகள் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார்" இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் , தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications