தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அத்துமீறிய கஞ்சா கும்பல் அட்டகாசம்.. துப்பு தந்த திருச்செந்தூர் ஓட்டல் உரிமையாளருக்கு சரமாரி வெட்டு

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கஞ்சா விற்பனை குறித்த துப்பு கொடுத்த ஓட்டல் உரிமையாளரை கஞ்சா போதை கும்பல் ஒன்று கொலைவெறியுடன் பட்டா கத்தியால் கொடூரமாக தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வெறி தாக்குதலில் படுகாயம் அடைந்த ஒட்டல் உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கஞ்சா விற்பனை குறித்து துப்பு.. ஓட்டல் புகுந்து உரிமையாளரை வெட்டிய கும்பல்.. பரபரத்த தூத்துக்குடி!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா புழக்கம் அதிக அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக காவ்லதுறை கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகிறது.

பற்றி எரிந்த கார்! உள்ளே தவித்த பந்த்! தக்க நேரத்தில் ஓடி வந்த உதவிய பஸ் டிரைவர்! வெளியான புது தகவல்பற்றி எரிந்த கார்! உள்ளே தவித்த பந்த்! தக்க நேரத்தில் ஓடி வந்த உதவிய பஸ் டிரைவர்! வெளியான புது தகவல்

போதைப்பொருட்களின் நடமாட்டம்

போதைப்பொருட்களின் நடமாட்டம்

போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்துள்ள தமிழக காவல்துறை போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் பல்வேறு இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டம் குறையவில்லை என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

சாலை மறியல் போராட்டம்

சாலை மறியல் போராட்டம்

ஆறுமுகநேரியைச் சேர்ந்த பால குமரேசன் என்பவர் ஆதவா என்ற பெயரில் தொண்டு நிறுவனம் மற்றும் பால் பண்ணை மற்றும் ரெஸ்டாரன்ட் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார். ஆறுமுகநேரியில் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர்களால் வழிப்பறி திருட்டு போன்ற சம்பவங்கள் நடந்து வந்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களுக்கு ஆறுமுகநேரி பஜாரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை பாலகுமரேசன் உள்பட பலர் முன்னெடுத்து நடத்தியுள்ளனர்.

கொலைவெறி தாக்குதல்

கொலைவெறி தாக்குதல்

இந்த சாலை மறியலுக்குப் பிறகு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆறுமுகநேரியை சேர்ந்த முத்துராஜ் மற்றும் அவரது உடன் பிறந்த தம்பி மத்துராஜேஷ், முத்து சதீஷ் மற்றும் அவருடன் இருந்த கூட்டளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முத்துராஜ் மீது போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சில கும்பல் நேற்று ஆதவா ரெஸ்டாரண்டில் பாலகுமரேசன் இருந்த போது அவரை கொலை செய்யும் முயற்சியுடன் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

பட்டாக்கத்தி மற்றும் கருக்கு மட்டையால்

பட்டாக்கத்தி மற்றும் கருக்கு மட்டையால்

10 பேர் கொண்ட கும்பல் அரிவாள் மற்றும் பனை மரத்தின் கருக்கு மட்டையால் சரமாரியாக அவரது ஓட்டலுக்குள் புகுந்தனர். அவர்கள் அங்கு இருந்த பாலகுமரேசனை குறிவைத்து தாக்கினர். பட்டாக்கத்தி மற்றும் கருக்கு மட்டையால் பாலகுமரேசனை தாக்குகின்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் பாலகுமரேசன் படுகாயம் அடைந்தார். இதற்கிடையே அந்த கும்பலினர் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து பலத்த காயம் அடைந்த பாலகுமரேசன் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சமூக ஆர்வலர்கள் கருத்து

சமூக ஆர்வலர்கள் கருத்து

கஞ்சா விற்பனைக்கு எதிராக குரல் கொடுத்த நபர் மீது கும்பல் ஒன்று கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தியிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, போலீசார் இத்தகைய சட்ட விரோத கும்பல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

English summary
CCTV footage of a gang of ganja addicts brutally attacking a hotel owner near Tiruchendur in Thoothukudi district with a strap knife has created a sensation. The owner of the otel, who was seriously injured in the murderous attack, is being admitted to the hospital and is undergoing treatment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X