தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3வது இடத்துக்கு தள்ளப்படும் கடம்பூர் ராஜு.. கோவில்பட்டியில் டிடிவி விஸ்வரூபம்.. ஆனால் வெறும் 1% தான்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: அமமுக துணை பொதுச்செயலாளர் போட்டியிடும் கோவிப்பட்டி தொகுதியின் நிலவரம் என்ன என்று சத்தியம் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.

சத்தியம் தொலைக்காட்சி சார்பாக தமிழக சட்டசபை தேர்தலுக்கான கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை கணித்து சர்வே வெளியிட்டு உள்ளனர்.

இதில் பல தொகுதிகளில் அதிமுக, திமுக இடையே பெரிய அளவில் போட்டி நிலவுகிறது. இதனால் இந்தமுறை பல தொகுதிகளில் இழுபறி நீடிக்கும் என்கிறார்கள்.

 தூத்துக்குடி

தூத்துக்குடி

தூத்துக்குடி தொகுதியில் திமுக 36% ; த.மா.கா. 34%; நாம் தமிழர் 14%; தேமுதிக- 9%; மநீம-5% வாக்குகள் பெறும்

ஶ்ரீவைகுண்டம்- காங்கிரஸ் 30%; அதிமுக- 20%; அமமுக- 18%; நாம் தமிழர் 11%; மநீம- 10% வாக்குகள் பெறும்

திருச்செந்தூர்- திமுக 35%; அதிமுக-19%; நாம் தமிழர் 16%; அமமுக-11; மநீம-7% வாக்குகள் பெறும்

விளாத்திகுளம்- திமுக 31%; அதிமுக-26%; அமமுக- 16%; மநீம- 15%; நாம் தமிழர் 11% வாக்குகள் பெறும்

கோவில்பட்டி

கோவில்பட்டி

தூத்துக்குடியில் அமமுக துணை பொதுச்செயலாளர் போட்டியிடும் கோவிப்பட்டி தொகுதி நிலவரம் பின்வருமாறு,.

கோவில்பட்டி- அமமுக 26%; சி.பி.ஐ. 25%; அதிமுக 24%; நாம் தமிழர் 12% மநீம-11% வாக்குகள் பெறும்.

இழுபறி

இழுபறி

சத்தியம் தொலைக்காட்சியின் கணிப்பின்படி இங்கு கடும் இழுபறி நீடிக்கும். 26% வாக்குகளுடன் தினகரன் வெறும் 1% வாக்குகள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளார். திமுக கூட்டணியில் உள்ள சிபிஐ 25% வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

அதிமுக

அதிமுக

இங்கு அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு 24% வாக்குகள் பெறுகிறார். இவர் மூன்றாம் இடத்தை பிடிக்கிறார். ஆனால் குறைந்த வேறுபாடு மட்டுமே இருப்பதால் தேர்தல் முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் மாறும் என்கிறார்கள் .

English summary
Sathiyam Tv opinion poll: TTV Dinakaran has chances of doing magic in Kovilpatti against DMK, AIADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X