கையில் சிலம்பத்தை எடுத்த மணப்பெண்.. என்ன ஒரு ஆட்டம் பாருங்க.. மலைத்துப்போன மாப்பிள்ளை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே திருமண ஊர்வலத்தில் மணப்பெண் நிஷா பாரம்பரிய கலைகளான சுருள் வாள் வீச்சு, சிலம்பம் ஆகியவற்றை ஆடி அசத்தினார். இந்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
Recommended Video
திருமண விழாக்களில் மணப்பெண் மனமகன் இடையே சின்ன சின்ன குறும்பு விளையாட்டுக்கள் அந்த காலங்களில் இடம் பெற்று இருக்கும். அந்த குறும்பு விளையாட்டுகள், குறும்புகள் திருமண வீட்டாரையும், மணப்பெண், மனமகன் இருவரையும் ரசிக்க வைக்கும். காலத்தால் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.
காலம் மாற மாற, குறும்பு விளையாட்டுகளை தாண்டி, முதலே சினிமா பாடல்கள் பாடுவது, உறவினர்கள்,நண்பர்கள் நடனமாடுவது என்று மாறியது.,

நடனங்கள்
திருமணம் என்பது ஒரு நாள் கூத்து என்று இல்லாமல் உற்சாகமாக கொண்டாடும் நிகழ்வாக இப்போது மாறி வருகிறது. முன்பு உறவினர்கள் அல்லது நண்பர்கள் ஆடிய நிலையில் இப்போது மணப்பெண், மனமகணும் நடனமாடும் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன, இது தொடர்பான வீடியோக்களையும் நாம் அதிகமாக பார்த்திருப்போம்.

உற்சாகம்
குறிப்பாக மணப்பெண் திருமண மண்டபத்திலோ அல்லது திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலோ போடும் ஆட்டங்கள் மிகப்பெரிய வரவேற்பை இன்று பெற்றுள்ளன. மணப்பெண் நடனமாடுவதை குடும்பத்தினரும் முன்பு போல் தடுக்காமல் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துகிறார்கள்.

மணப்பெண் அசத்தல்
இந்நிலையில் தூத்துக்குடி அருகே திருமண ஊர்வலத்தில் மணப்பெண் தமிழர்களின் வீரக்கலைகளை ஆடி பரவசத்தில் ஆழ்த்தினார், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள தேமாங்குளத்தில் ராஜ்குமார், நிஷா ஆகியோருக்கு திருமணம் நடந்தது. திருமண ஊர்வலத்தில் மணப்பெண் நிஷா, பாரம்பரிய கலைகளான சுருள் வாள் வீச்சு, சிலம்பம் ஆகியவற்றை ஆடி அசத்தினார்.

மாப்பிள்ளை மலைத்துப்போனார்
அதை பார்த்து, திருமணத்திற்கு வந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். இந்த காட்சிகளை பார்த்து திருமண மாப்பிள்ளை அப்படியே மலைத்துப்போனார். உறவினர்களும் நெகிழ்ந்து போனார்கள். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாரம்பரிய கலைகள்
இன்றைக்கு சிலம்பம், வில் வித்தை, உள்பட தமிழர்களின் பாரம்பரிய கலைகளை கற்பது குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. மக்கள் வீரக்கலைகளை தேடிசென்று கற்க கொடங்கி வருகின்றனர். இந்த கலைகள் திருமண விழாவில் வந்திருப்பது நல்ல மாற்றம் ஆகும். அதுவும் மணப்பெண்ணே ஆடியது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications