”லைக்ஸ்” வெறித்தனம்.. வியாபாரியை தீக்குளிக்க தூண்டி ‘லைவ்’ வீடியோ எடுத்த யூ டியூபர் அதிரடி கைது!
தூத்துக்குடி: தமது யூடியூப் வீடியோவுக்கு லைக்ஸ்கள் அதிகமாக வரவேண்டும்; பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த வியாபாரியை ஆட்சியர் அலுவலகத்துக்குப் போய் தீக்குளிக்க தூண்டிவிட்டு லைவ்வாக வீடியோ பதிவு செய்த யூ டியூபர் விக்னேசுவரனை தூத்துக்குடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தின்னரை உடலில் தேய்த்துக் கொண்டு வியாபாரியை தீக்குளிப்பு நாடகமாடச் செய்ததாக யூ டியூபர் விக்னேசுவரன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பாஸ்கர் என்ற வியாபாரிக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் பாலசுப்பிரமணிக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதை நாள்தோறும் கவனித்து வந்தார் அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகன் விக்னேசுவரன்.

விக்னேசுவரன் ஒரு யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறாராம். யூ டியூபர்களுக்கே உள்ள லைக்ஸ் மற்றும் பரபரப்பு வெறித்தனம் விக்னேசுவரனுக்குள்ளும் 'பெருக்கெடுத்து’ ஓடியிருக்கிறது. இதனால் பாஸ்கரை நேரில் சந்தித்து, தின்னர் திரவத்தை உடலில் தேய்த்துக் கொண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிப்பதாக நாடகமாடுங்கள்.. நான் அதை அப்படியே லைவ்வாக வீடியோ எடுத்து யூ டியூப் சேனலில் போடுகிறேன். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உங்க பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். எனக்கும் லைக்ஸ் குவிந்து பணமும் கிடைக்கும் என ஆசைவார்த்தை காட்டியுள்ளார்.
இதை நம்பிய பாஸ்கரும் விக்னேசுவரனின் தூண்டுதலில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று தீக்குளிப்பு நாடகத்தை நடத்த முயன்றுள்ளார். ஆனால் அங்கிருந்த போலீசார் பாஸ்கரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில்தான் தம்மை தீக்குளிப்பு நாடத்துக்கு தூண்டியதே யூ டியூபர் விக்னேசுவரன் என ஒப்புதல் வாக்குமூலம் தந்தாராம் பாஸ்கரன். இதனடிப்படையில் தற்போது யூ டியூபர் விக்னேசுவரனை தூத்துக்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூ டியூபர்கள் தொடர்ந்து பரபரப்பு மற்றும் லைக்ஸ்க்காக ஆபாசமாக பேசுதல், அருவறுக்கத்தக்க வகையில் விமர்சித்தல் என செயல்பட்டு சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
"நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர்..!" கண்ணீர் மல்க பேசிய நடிகை தீபாவின் அப்பா... நேரில் ஆறுதல் கூறிய கீதா ஜீவன் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications