வீட்ட அபகரிச்சுட்டு மிரட்டுறாங்க சார்! தூத்துக்குடி பாஜக நிர்வாகி மீது பெண் பரபரப்பு புகார்
தூத்துக்குடி: பாஜக பிரமுகரும் அவரது மனைவியும் சேர்ந்து தனது வீட்டை அபகரித்ததுடன் லட்சக்கணக்கில் பண மோசடி செய்து இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து இருக்கிறார்.
தூத்துக்குடி கே.டி.சி. நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (52). தூத்துக்குடி குறிஞ்சி நகரை சேர்ந்த பாஜக பிரமுகர் மனோகர் நாட்டாமை (49) மற்றும் அவரது மனைவி ஜெயபார்வதி (49) ஆகியோர் மீது மோசடி புகார் கொடுத்து இருக்கிறார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு தனக்கு அவசர அவசரமாக பணம் தேவைப்பட்ட காரணத்தால் பாஜக பிரமுகர் மனோகரை சந்தித்து உதவி கோரியதாக தனது புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

வீட்டை கொடுத்தால் ரூ.25 லட்சம் கடன்
அதற்கு மனோகரும் அவரது மனைவி ஜெயபார்வதியும் தனக்கு வங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறியதாகவும், இதற்காக தனது வீட்டை அவர்கள் பெயரில் எழுதி கேட்டதாகவும், கடனை அடைத்தவுடன் வீட்டை எனது பெயருக்கு எழுதி வைப்பதாக உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வீட்டை வைத்து நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.25 லட்சம் கடன் பெற்றுத் தருவதாக அவர்கள் தெரிவித்ததாகவும் ராஜேஸ்வரி புகாரளித்துள்ளார்.

பாஜக பிரமுகர் பெயரில் பத்திரப்பதிவு
இதனை நம்பி தனக்கு சொந்தமான வீட்டை அவர்களின் பெயருக்கு எழுதிக்கொடுத்தேன் எனக் கூறும் ராஜேஸ்வரி, இதற்காக ரூ.6.5 லட்சம் செலவில் பத்திரப்பதிவு செய்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மாதந்தோறும் ரூ.25,000 பணம் செலுத்தியதாகவும் ராஜேஷ்வரி தெரிவித்து உள்ளார்.

கார் வாங்க தொழில் தொடங்கவும் பணம் வசூல்
பாஜக பிரமுகர் மனோகர் கார் வாங்குவதற்காக ரூ.1.50 லட்சம் பணமும், புதிய தொழில் தொடங்குவதற்காக ரூ.6 லட்சம் பணமும் வழங்கியதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், தனது பெயரில் மாற்றிக்கொண்ட வீட்டை பாஜக பிரமுகர் மனோகரும் அவரது மனைவியும் மீண்டும் தனக்கு தரவில்லை என்று ராஜேஸ்வரி குற்றம்சாட்டியுள்ளார்.

உயிருக்கே ஆபத்து
மேலும் தன்னிடம் பெற்ற இதர தொகைகளையும் கொடுக்க மறுப்பதாகவும் வீட்டையும், பணத்தையும் திருப்பிக் கேட்டதற்காக மனோகர் தன்னை மிரட்டுவதாகவும் புகாரளித்துள்ள ராஜேஸ்வரி, தனது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரலாம் என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications