ஒலா-வுக்கு வேட்டு வைக்க வரும் வின்பாஸ்ட்? 200 ஏக்கர் தூத்துக்குடி பேக்டரியில் ரெடியாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
தூத்துக்குடி: வியட்நாம் நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன நிறுவனமான வின்பாஸ்ட் இந்திய சந்தையை பிடிக்கும் மெகா திட்டத்துடன் தூத்துக்குடியில் 200 ஏக்கர் பரப்பளவில் மாபெரும் தொழிற்சாலையை உருவாக்கியுள்ளது. இத்தொழிற்சாலையில் முதலில் கார் மட்டுமே தயாரித்து வந்த வின்பாஸ்ட் அடுத்தக்கட்டமாக எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் நுழையும் திட்டத்தை அறிவித்துள்ளது.
2027 நிதியாண்டில் இந்திய e2W (Electric Two-Wheeler) சந்தையில் கால் பதிக்க முடிவு செய்துள்ள இந்நிறுவனம், வியட்நாம் நாட்டில் வெற்றிகரமாக இயங்கிகொண்டு இருக்கும் தனது 3 முக்கிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

வின்பாஸ்ட் நிறுவனம் ஆரம்ப கட்டமாக மூன்று பேட்டரி ஸ்வாப்பிங் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. வின்பாஸ்ட் Evo, வின்பாஸ்ட் Feliz II மற்றும் வின்பாஸ்ட் Viper ஆகிய 3 மாடல்களை முதல் கட்டமாக களமிறக்க உள்ளது. இந்த மாடல்கள் தற்போது வியட்நாம் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் தயாரிப்புகளாகும்.
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ஸ்கூட்டர்கள் சார்ஜிங் வசதி கொண்டது, ஆனால் வின்பாஸ்ட் பேட்டரி ஸ்வாப்பிங் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
இந்த வாகனங்களை இந்தியாவில் குறைந்த விலையில் விற்க வேண்டும் என்ற திட்டத்துடன், முதல் கட்டமாக CKD (Completely Knocked Down) அதாவது உதிரிபாகங்களாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, தூத்துக்குடி தொழிற்சாலையில் அசம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளது வின்பாஸ்ட்.
அடுத்த கட்டமாக இந்திய சந்தையின் தேவைகள் மற்றும் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் வாகனங்களில் மாற்றங்கள் செய்யப்படும் என வின்பாஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி SIPCOT தொழிற்பேட்டையில் சுமார் 200 ஏக்கர் நிலத்தில் இயங்கி வரும் வின்பாஸ்ட் சாம்ராஜ்ஜியத்தில் இரு சக்கர வாகனங்களுக்காக உற்பத்தி வசதிகளை விரிவுபடுத்தி, தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஓசூர் போல் தமிழ்நாட்டை முக்கிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மையமாக தூத்துக்குடி மாற்றும்.
எலக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையில் வின்பாஸ்ட் என்டரி, இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் பெரும் போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இச்சந்தையை டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ, ஏதர் எனர்ஜி மற்றும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதர சில சிறிய நிறுவனங்கள் இருந்தாலும் அதிகப்படியான வர்த்தகத்தை பெறுவது இந்த 4 நிறுவனங்கள் மட்டுமே, இதில் ஓலா எலக்ட்ரிக்-ன் விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது.
வின்பாஸ்ட் நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் கார்கள் விற்பனை தொடங்கிய நிலையில், தற்போது இருசக்கர வாகனங்கள் மற்றும் எலக்ட்ரிக் பஸ்கள் போன்ற புதிய பிரிவுகளிலும் தூத்துக்குடி தொழிற்சாலையை வைத்து விரிவாக்கம் செய்து வருகிறது.
இந்திய எலக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் வர்த்தகம் பல்வேறு காரணத்தால் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் மார்ச் மாதம் மீண்டு வந்துள்ளது. பிப்ரவரி மாதம் வெறும் 3973 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்த ஓலா எலக்ட்ரிக் மார்ச் மாதம் 10,117 வாகனங்களை விற்பனை செய்தது. மார்ச் மாதத்தின் கடைசி ஒரு வாரத்தில் தினமு்ம 1000 ஆர்டர்கள் குவிந்துள்ளது.
இதனால் நேற்றைய வர்த்தகத்தில் ஓலா எலக்ட்ரிக் பங்குகள் சுமார் 14 சதவீதம் வரையில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இன்றும் 7.15 சதவீதம் உயர்ந்து 27.75 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி 1.5 சதவீதம் சரிந்தவடைந்த நிலையிலும் ஓலா பங்குகள் 7 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications