தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கணவன் வெளிநாட்டில்.. உள்ளூரில் இளைஞருடன் நெருக்கம்.. தூத்துக்குடியில் விமான பணிப்பெண் விபரீத முடிவு!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி : தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கைக்குழந்தையுடன் வந்த விமானப் பணிப்பெண் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

    கணவன் வெளிநாட்டில்.. உள்ளூரில் இளைஞருடன் நெருக்கம்.. தூத்துக்குடியில் விமான பணிப்பெண் விபரீத முடிவு!

    இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

    கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் உள்ளூர் இளைஞருடன் பழகிவந்த விமானப் பணிப்பெண் தனக்கு ஆபத்து இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.

    நடிகர் அஜித் வீட்டின் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி.. அஜித் மீது பரபரப்பு புகார்.. சென்னையில் ஷாக்நடிகர் அஜித் வீட்டின் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி.. அஜித் மீது பரபரப்பு புகார்.. சென்னையில் ஷாக்

    அயராது உழைக்கும் கணவன்

    அயராது உழைக்கும் கணவன்

    தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையை அடுத்த அய்யனார் காலனியை சேர்ந்த பொன். முனியசாமி என்பவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு பொன். இசக்கி என்ற மனைவியும், குழந்தை மற்றும் தாயும் உள்ளனர். குடும்பக் கஷ்டத்திற்காக கணவர் முனியசாமி வெளிநாட்டில் இரவு பகல் பாராமல், வெயில் மழை பாராமல் உழைத்து வருகிறார்.

    சக ஊழியருடன் சகவாசம்

    சக ஊழியருடன் சகவாசம்

    இந்நிலையில் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவன மேலாளரான சுரேஷ் என்பவருடன் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. கணவரும் அருகில் இல்லாததால் சுரேஷின் அரவணைப்பு இசக்கி முத்துவுக்கு ஆறுதலாக இருந்துள்ளது. மேலும் கைக்குழந்தையுடன் வாழ்ந்து வந்த இசக்கிக்கு சுரேஷ் அவ்வப்போது பண உதவி செய்து வந்ததாக தெரிகிறது.

    பணம் இல்லன்னா என்னுடன் வா

    பணம் இல்லன்னா என்னுடன் வா

    3வது மைல் பகுதியில் வசிக்கும் சுரேஷ் அடிக்கடி இசக்கியை சந்தித்து பழகி வந்துள்ளார். இந்நிலையில் நிறைய பணஉதவி செய்துவிட்டு அதற்கு மாறாக வேறு விதமான உதவிகளை இசக்கியுடன் கேட்டதாக கூறப்படுகிறது. அதை இசக்கி மறுக்கவே சுரேஷ் தான் கொடுத்த பணத்தை திரும்பி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட சுரேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார் பொன்.இசக்கி.

     கம்பி எண்ணிய சுரேஷ்

    கம்பி எண்ணிய சுரேஷ்

    இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு ஏற்பட்ட தகராறில் விவகாரம் காவல்நிலையத்தின் கதவை தட்டியது. தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தரவில்லை என்றால் கொன்றுவிடுவதாக மிரட்டுவதாகவும் பொன்.இசக்கி தந்த புகாரில் சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண் கைக்குழந்தையுடன் கஷ்டப்படுகிறாளே என கனிவுடன் உதவி செய்து வந்த சுரேஷ் சிறைக்கு சென்றதால் ஆத்திரமடைந்தார். சில மாதங்கள் கழித்து ஜாமினில் வெளிவந்த சுரேஷ். வாங்கிய பணத்தை தரவில்லை என்றால் கொன்றுவிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

    தற்கொலைக்கு முயற்சி

    தற்கொலைக்கு முயற்சி

    இதனால் அதிர்ந்து போன பொன்.இசக்கி தாய் மற்றும் கைக்குழந்தையுடன் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தார். அங்கே காவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் தான் எடுத்து வந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடல் மீது ஊற்றிக்கொண்டார். இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தீப்பெட்டியை எடுத்து பற்றவைக்க முயல அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அவர்மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

    கொலை மிரட்டல்

    கொலை மிரட்டல்

    அப்போது காவலர்கள் விசாரிக்க ஏற்கனவே தான் அளித்த புகாரில் சிறைக்கு சென்ற சுரேஷ் ஜாமினில் வெளிவந்து மீண்டும் தன்னை மிரட்டுவதாக கதறி அழுதார். பொன். இசக்கி கதறி அழுத காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்தது. பின்னர் பொன்.இசக்கி அவரது தாய் மற்றும் குழந்தை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். பொன். இசக்கியின் புகாரில் காவலர்கள் சுரேஷை அழைத்து மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மீண்டும் ஒரு சம்பவம்

    மீண்டும் ஒரு சம்பவம்

    இதுபோன்ற சம்பவங்கள் ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறுவது புதிது அல்ல. 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் கந்துவட்டி தொல்லையால் இசக்கி முத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து உயிரிழந்தார், இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடக்கும் கந்து வட்டி கொடுமைகள் வெளிச்சத்துக்கு வர தொடங்கின. இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சனை என்றால் போலீசை நாடுகிறார்கள். போலீஸ் புகார் மீது தயக்கம் காட்டுவது போல் இருந்தால் நேராக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். இதுபோன்ற சம்பவங்கள் ஊடகம் மூலம் உடனே அரசின் கவனத்திற்கும் சென்றுவிடுகிறது.

    English summary
    The Airport staff who came with her baby to the Thoothukudi Collector's office tried to selffire by pouring kerosene. The guards then immediately poured water on him to try to light the match. According to complaint, the police are planning to call Suresh and re-investigate.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X