என்னை மறந்துடீங்க.. திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மக்களிடம் கேள்வி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: மக்களுக்காக எங்களுடைய தளபதி என்னவெல்லாம் செய்துள்ளார். உங்களுக்காக அனைத்தும் செய்த எங்கள் முதல்வரை மறந்து விட்டீர்கள். என்னை மறந்து விட்டீர்கள். எங்களது கனிமொழி எம்பியை மறந்து விட்டீர்கள். என்னை விட அவருக்கு குறைவாகத்தான் போட்டு உள்ளீர்கள். ஆனால் எனக்கு 430 அவருக்கு 400 க்கு மேற்பட்ட வாக்குகள் அளித்துள்ளீர்கள். என்ன காரணத்திற்காக அவருக்கு (விஜய் கட்சிக்கு) இவ்வளவு வாக்குகள் போட்டீர்கள் என்று திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தொகுதி மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருகாட்டூர் பகுதியில் சமுதாய நலக்கூடம் கட்டி திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் திமுக அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

You have forgotten MK Stalin Tiruchendur MLA Anita Radhakrishnan questions the public

அப்போது அவர் பேசுகையில், "இந்த குருகாட்டூர் பகுதியில் எனக்கு மட்டும் 430-க்கும் மேற்பட்ட வாக்குகள் விழுந்துள்ளது. பாஜகவுக்கு 148 ஓட்டு விழுந்துள்ளது. இந்த தொகுதியில் தவெக சார்பில் நின்ற யாரென்றே தெரியாத முருகா முருகா என்ற நபருக்கு 400 க்கும் மேற்பட்ட வாக்குகள் விழுந்துள்ளது.

மக்களுக்காக எங்களுடைய தளபதி என்னவெல்லாம் செய்துள்ளார். உங்களுக்காக அனைத்தும் செய்த எங்கள் முதல்வரை மறந்து விட்டீர்கள். என்னை மறந்து விட்டீர்கள். எங்களது கனிமொழி எம்பி யை மறந்து விட்டீர்கள். என்னை விட அவருக்கு குறைவாகத்தான் போட்டு உள்ளீர்கள். ஆனால் எனக்கு 430 அவருக்கு 400 க்கு மேற்பட்ட வாக்குகள் அளித்துள்ளீர்கள். என்ன காரணத்திற்காக அவருக்கு இவ்வளவு வாக்குகள் போட்டீர்கள்.

எம்ஜிஆர் ஏழை மக்களுக்கு வாரி கொடுத்தார். தனது சொந்த பணத்தை கொடுத்தார். ஆனால் தற்போதுள்ள தமிழ்நாடு முதல்வர் மக்களுக்காக 100 பைசா அதாவது ஒரு ரூபாயாவது தனது சொந்த செலவை செய்திருப்பாரா. கல்யாணத்திற்கு ஒரு பவுன் நகையும், பட்டு சேலையும் கொடுப்பேன் என்று கூறினாரே, அதை நிறைவேற்ற முடிந்ததா என்று பேசினார்.

தொடர்ந்து குரங்கணி பகுதியில் நடந்த பாக முகவர் கூட்டத்தில் கலந்து கொண்டு அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.அப்போது அவர் பேசுகையில், எம்ஜிஆர் தனது சொந்த பணத்தை நாட்டு மக்களுக்காக செலவு செய்தார். ஆனால் தற்போதுள்ள தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் மக்களுக்காக ஒரு ரூபாயாவது செலவு செய்திருப்பாரா. பாஜகவிற்கு ஓட்டு போட்டது கூட பரவாயில்லை. ஜோசப் விஜய் என்பவர் முழங்கால் போட்டு நடந்ததற்காக அவருக்காக வாக்கு போட்டீர்களா.

இந்த ஊரில் பாஜகவுக்கும், தமிழக வெற்றி கழகத்தை விட எனக்கு குறைவான வாக்கே கிடைத்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தோமா இல்லையா. மகளிர் இலவச பேருந்து விட்டோமா இல்லையா. ஆனால் இங்கிருந்து சென்னை வரை இலவசமாக பேருந்து விடுவோம் என்று கூறினாரே விட முடிந்ததா. இந்த ஊரில் நடைபெறும் கோவில் திருவிழா எந்தவித இடையூறும் இல்லாமல் நடப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட எனக்கு அல்லவா நீங்கள் வாக்கு செலுத்தி இருக்க வேண்டும். விரைவில் தளபதி ஸ்டாலின் ஆட்சி தமிழகத்தில் அமையும் நன்றி வணக்கம் என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+