அரசு அதிகாரிகள் மோனிகா, புனிதா, புல்கிஸ் பேகம்.. ஏப்ரல் 3ஐ ஜென்மத்துக்கு மறக்கவே மாட்டாங்க.. பாருங்க

Subscribe to Oneindia Tamil

வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் துரைசாமி நகர் பகுதியை சேர்ந்த சரவணன் வீட்டின் அருகே கடை வைத்துள்ளார். அதற்காக மின்இணைப்பை வணிக இணைப்பாக மாற்றுவதற்கு விண்ணப்பித்துள்ளார். அந்த இணைப்பை வணிக இணைப்பாக மாறுதல் செய்வதற்கு உதவி செயற்பொறியாளர் புனிதா, போர்மென் புல்கிஸ் பேகம், வணிக ஆய்வாளர் மோனிகா ஆகியோர் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைதாகி உள்ளார்கள்.

இப்போது எல்லாம் மக்களிடம் லஞ்சம் குறித்து மக்களுக்கு அதிகப்படியான புரிதல் இருக்கிறது. விரைவாக காரியம் சாதிக்க வேண்டும் என்று நினைத்து சிலர் லஞ்சம் கொடுக்கிறார்கள். அதேபோல் சில அரசு ஊழியர்கள் கொடுத்தால் தான் பணிகளை செய்ய வேண்டும் என்றும் செயல்படுவது உண்டு. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் அவர்களை மாட்டிவிடாமல், நமக்கு ஏன் வம்பு என்று பலர் ஒதுங்கி செல்கிறார்கள்.

3 EB officials arrested for accepting a bribe of Rs 25000 in Arakkonam near Vellore

புகார் அளிக்க தயக்கம்

பலர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்காமல் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு செல்கிறார்கள். சிலர் கேட்கும் பணத்தில் பேரம் பேசி குறைவான பணம் கொடுத்து காரியம் சாதித்தால் போதும் என்று நினைக்கிறார்கள். யாராவது ஒருவரே என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்று புகார் அளிக்கிறார்கள்.. பொதுமக்கள் மட்டும் லஞ்சம் கேட்கும் அனைவர் மீதும் உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்து மாட்டிவிட தொடங்கினால், தமிழ்நாட்டில் லஞ்சத்திற்கு எதிராக மிகப்பெரிய மாற்றம் வரும்..

அரக்கோணம் சம்பவம்

ஏனெனில் எங்கோ யாரோ ஒருவரே அதுவும் வாரங்களில் சிலரே சிக்குகிறார்கள். தினமும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாட்டிவிட தொடங்கினால் பலருக்கும் வேலை போய்விடும்.. பலர் லஞ்சம் வாங்கவே முடியாது. நிலைமை அடியோடு மாறிவிடும். இதில் மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.. ஏனெனில் காரியத்தை விரைவாக சாதிக்கவே பலர் லஞ்சம் கொடுப்பது நடக்கிறது. 3 நாளில் முடிய வேண்டிய வேலையை ஒரு நாளில் முடிக்க விரும்பும் சிலர் லஞ்சம் கொடுப்பதும் நடக்கிறது. அரக்கோணம் அருகே நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணத்தில் கடைக்கான மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்றுவதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 3 மின்வாரிய பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் துரைசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்பவர் தனது வீட்டின் அருகில் கடை ஒன்றை அமைத்துள்ளார்.

மின் இணைப்பு

அதற்கான மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்றுவதற்கு விண்ணப்பித்துள்ளாராம். அந்த இணைப்பை வணிக இணைப்பாக மாறுதல் செய்வதற்கு உதவி செயற்பொறியாளர் புனிதா, போர்மென் புல்கிஸ் பேகம், வணிக ஆய்வாளர் மோனிகா ஆகியோர் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.

50000 கொடுத்தார்

அதன்படி முதற்கட்டமாக ரூ.50 ஆயிரத்தை சரவணன் கொடுத்து இணைப்பை மாற்றும்படி கேட்டாராம். அப்போது மீதம் உள்ள ரூ.50 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே இணைப்பை மாற்ற முடியும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் மீதமுள்ள பணத்தை நேற்றைக்குள்( ஏப்ரல் 3) தர வேண்டும் என நிர்பந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

3 பெண் அதிகாரிகள்

அதன்படி அலுவலகத்தில் இருந்த உதவி செயற்பொறியாளர் புனிதா, போர்மென் புல்கிஸ் பேகம், வணிக ஆய்வாளர் மோனிகா ஆகிய 3 பெண் அதிகாரிகளிடம் சரவணன் பணத்தை கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+