லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா சமபவம் பண்றாங்கப்பா...இடையம்பட்டியில் அதிமுகவினர் மறியல்
திருப்பத்தூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடையம்பட்டி சாலை அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
வேலூர், திருப்பத்தூர், ஜோலார்ப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 28 இடங்களில் கேசி வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
குறிப்பாக திருப்பத்தூரில் மற்றும் ஜோலார்பேட்டை பகுதிகளில் மட்டும் சுமார் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஹில்ஸ், ஏலகிரி மலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஹில்ஸ், 3) ஜோலார்பேட்டை காந்தி ரோட்டில் அமைந்துள்ள கேசி வீரமணி வீடு, பழைய ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி சாலையில் அமைந்துள்ள வீரமணியின் மற்றொரு வீடு ஆகியவற்றில் சோதனை நடக்கிறது.

யார் யார் வளையத்தில்
இதேபோல் கேசி வீரமணியின் தம்பி காமராஜ் வீடு, கேசி வீரமணியின் அண்ணன் அழகிரி வீடு, வீரமணியின் குடும்பத்தைச் சார்ந்த பிடி மண்டி என்பவரது வீடு, தமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ் வீடு, திருப்பத்தூரில் அமைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ரமேஷ் வீடு, ஏலகிரி கிராமத்தில் அமைந்துள்ள அதிமுக மகளிர் அணி தலைவியான சாந்தி வீடு, ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபம், நாட்றம்பள்ளி மல்லகுண்ட பகுதியை சேர்ந்த மாவட்ட பொருளாளர் ராஜா என்பவரது வீடு. நாட்றம்பள்ளி பகுதியைச் சார்ந்த ஒன்றிய செயலாளர் சாமராஜ் என்பவரது வீடு, நாட்றம்பள்ளி கத்தாரி பகுதியை சேர்ந்த குட்லக் ரமேஷ் என்பவரது வீடு , ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் சீனிவாசன் வீட்டில் என சுமார் 14 வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனை தீவிரம்
லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தும் விவகாரம் முதலில் யாருக்குமே தெரியவில்லை. செய்திகளை ஊடகங்களில் பார்த்த பின்னரே முன்னாள் அமைச்சர் kc வீரமணி வீட்டின் முன்பாக தொண்டர்கள் திரண்டனர். வேலுமணி வீட்டில் நடந்ததுபோல் நடக்க கூடாது என நினைத்த அதிகாரிகள் மிக ரகசியமாக வைத்திருந்த காரணத்தால் அதிமுகவினருக்குசோதனை குறித்து தெரியவில்லை இதனிடையே லேட்டாகவே வந்து இடையம்பட்டி சாலையில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.

எஸ்பி வருகை
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு கூறி சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது தொண்டர்கள் அனைவரும் முன்னாள் அமைச்சரை பார்ப்பதற்கு வக்கீல் மற்றும் தொண்டர்களை யாராவது ஒருவரை அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

சாலை மறியல்
இதனிடையே வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார். முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications