ஆம்பூரில் மனைவியிடம் கெஞ்சிய கணவன்.. ஒரே இரவில் மாறிப்போன குடும்பம்.. யாரந்த ஆண் நண்பர்?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, மனைவியின் செயலை பார்த்து, நொந்து போன கணவன், தற்கொலையே செய்துகொண்டுவிட்டார்.. எத்தனை முறை அறிவுறுத்தியும் மனைவி கேட்கவில்லையாம்... எப்படியாவது திருந்திவிட வேண்டும் என்ற முனைப்புடன் காத்திருந்த கணவனுக்கு கடைசியில் ஏமாற்றமே மிச்சம்.. அப்படி என்ன நடந்தது? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

ஆம்பூர் சான்றோர் குப்பம் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் பாலச்சந்திரன் (26). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காவியா என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

Ambur wife Ambur Crime News Ambur Husband

ஸ்டிக்கர் கடை

பாலச்சந்திரன் ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள ஸ்டிக்கர் கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், புதிய மின்னூர் ராமர் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன் வசந்த் (36), ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். வசந்துக்கும் திருமணமாகி விட்டது.. லாவண்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில், வசந்துக்கும் காவியாவுக்கும் நட்பு ஏற்பட்டு, அதுவே தவறான உறவில் போய் முடிந்துள்ளது.. இந்த விஷயம் பாலச்சந்திரனுக்கு தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் காவியாவிடம் பாலச்சந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுபோன்ற உறவுமுறை தவறு என்றெல்லாம் அட்வைஸ் செய்துள்ளார்.. ஆனாலும் காவியா தன்னுடைய பிடிவாதத்தை தளர்த்தி கொள்ளவில்லை..

காவியா செய்த காரியம்

நேற்றிரவு வசந்த் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தபோது, பாலச்சந்திரன் அவரை வழிமறித்துள்ளார். தன்னுடைய மனைவியுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது என்று கறாராக சொல்லி உள்ளார்.. பின்னர் இது தொடர்பாக இருவருக்குமே வாக்குவாதம் வெடித்துள்ளது.. அப்போது வசந்த் பாலச்சந்திரனை துரத்தி துரத்தி கத்தியால் தாக்கியிருக்கிறார்..

இதில் வசந்த் படுகாயமடைந்த நிலையில், உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதித்திருக்கிறார்கள்.. அதேபோல, பாலச்சந்திரனுக்கும் காயம் ஏற்பட்டு, அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கடும் மன உளைச்சலில் கணவர்

ஆனால் இந்த சம்பவத்தினால் அளவுக்கு அதிகமான மன உளைச்சலுக்கு ஆளான பாலச்சந்திரன், நேற்று காலை தன்னுடைய மாமியார் வீட்டுக்கு 11 மணிக்கு வந்து, வீட்டின் கூரையில் இருந்த கம்பியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. கணவரின் இந்த கோலத்தை காவியா அதிர்ச்சியடைந்து அலறினார்..

உடனடியாக பாலச்சந்திரனை மீட்டு ஆட்டோ மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாலச்சந்திரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக சொல்லிவிட்டார்கள்..

இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாலச்சந்திரனின் உடலை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

எகிறி தப்பிய வசந்த்

இதனிடையே, பாலச்சந்திரன் தற்கொலை செய்து இறந்துவிட்டதை கேள்விப்பட்டதுமே, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வசந்த், அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். எனினும் ஆம்பூர் போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்துவிட்டனர்..

பாலச்சந்திரன் தற்கொலைக்கான முழுமையான காரணம் என்ன என்பது தெரியவில்லை. மனைவியின் இந்த தகாத உறவு காரணமாக அவமானத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என்கிறார்கள்.. எனினும் வசந்த் மற்றும் காவியாவுடனான தொடர்பு குறித்து மேலும் என்ன நடந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+