Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தந்தி டிவி சர்வே: வேலூரை மீண்டும் கோட்டையாக்கும் திமுக! முட்டி மோதியும் தேறாத பாஜக

Subscribe to Oneindia Tamil

வேலூர்: நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. வேலூர் லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளரை திமுக வீழ்த்தும் என தந்தி டிவி கணித்திருக்கிறது.

இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்துள்ளன. இந்த லோக்சபா தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாகும்.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Exit Poll BJP Congress Thanthi Vellore 2024

பாஜகவை பொறுத்த அளவில், மோடி மீண்டும் பிரதமரானால், நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்று முறை பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையை அவர் பெறுவார். அதேபோல, 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்காக பாஜக ஆட்சிப்பொறுப்பில் இருக்க வேண்டியது முக்கியம்.

காங்கிரஸை பொறுத்த அளவில் ஆட்சியில் இல்லாத இந்த 10 ஆண்டுகளில் குலாம் நபி ஆசாத் தொடங்கி பல்வேறு தலைவர்கள் கட்சியை விட்டு விலகி சென்றுள்ளனர். பல மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸ் இழந்திருக்கிறது. எனவே இந்த முறை மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் கட்சி இருக்கிறது. எனவே ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என முரண்பட்ட கட்சிகளை இந்தியா கூட்டணி என இணைத்து தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கிய லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. இதனையடுத்து தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

வாக்குச்சாவடிகளில் வாக்களித்துவிட்டு வரும் ஒவ்வொரு 10 வாக்காளர்களில் ஒருவரிடம், யாருக்கு வாக்களித்தீர்கள் என்கிற விவரம் கேட்கப்படும். அவர் கூற விரும்பும் பட்சத்தில் இப்படியாக தரவுகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்து கருத்து கணிப்புகளாக வெளியிடப்படும். சி-வோட்டர், ஆக்சிஸ் மை இந்தியா, சிஎன்எக்ஸ் ஆகிய அமைப்புகள் கருத்துக்கணிப்பு நடத்தும் அமைப்புகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இது தவிர ஏராளமான மீடியாக்கள் கருத்துக்கணிப்பை வெளியிடுகின்றன.

அந்த வகையில் தற்போது தந்தி டிவி கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, வேலூர் லோக்சபா தொகுதியில் திமுக 35% வாக்குகளையும், பாஜக கூட்டணியின் புதிய நீதிக்கட்சி 33% வாக்குகளையும், அதிமுக 22% வாக்குகளையும் பெறும் என தந்தி டிவி கணித்திருக்கிறது.

வேலூர் லோக்சபா தொகுதியில் கடந்த 2019ம் ஆண்டு திமுகவின் கதிர் ஆணந்த் வெற்றி பெற்றார். இந்த முறையும் அவரையே திமுக களமிறக்கியது. இவரை எதிர்த்து கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம், இந்த முறை பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சி சார்பில் களமிறங்கினார். இவரை ஆதரித்து பிரதமர் மோடி வேலூருக்கு வந்து பிரசாரம் மேற்கொண்டிருந்தார் என்பத குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+