வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ்தாய் வாழ்த்து ஏன் பாடல? அறநிலையத்துறை விழாவில் கடுகடுத்த துரைமுருகன்.. சேகர் பாபு அப்சட்

Google Oneindia Tamil News

வேலூர்: மாவட்ட அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடாதது ஏன் என அமைச்சர் துரைமுருகன் மேடையிலேயே கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்பு விழா புதிய பேருந்து நிலையம் அருகே செல்லியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்றது.

21 கிமீ! 7 என்ட்ரி! 6 எக்சிட்! டபுள் டக்கர் பாலம்.. சென்னை துறைமுகத்திற்கு இனி பறக்கலாம்! சூப்பர் 21 கிமீ! 7 என்ட்ரி! 6 எக்சிட்! டபுள் டக்கர் பாலம்.. சென்னை துறைமுகத்திற்கு இனி பறக்கலாம்! சூப்பர்

இந்த விழாவில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வேலூர் மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக எம்.பிக்கள், வேலூர், குடியாத்தம், அணைக்கட்டு தொகுதி திமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் தாய் வாழ்த்து

தமிழ் தாய் வாழ்த்து

தமிழ்நாட்டில் அரசு சார்பில் நடத்தப்படும் விழாக்களில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுவது மரபாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்த விழாவில் இறை வாழ்த்து மட்டும் பாடப்பட்டு தமிழ் தாய் வாழ்த்து பாடப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன் தனது உரையின்போது இதனை சுட்டிக்காட்டி கண்டித்தார்.

துரைமுருகன் கண்டிப்பு

துரைமுருகன் கண்டிப்பு

அவர் பேசுகையில், "அறநிலையத்துறை விழாக்களில் தேவாரம் பாடட்டும், திருவாசகம் கூட பாடட்டும். அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், அறநிலையத்துறையும் அரசு துறைதான். இதுவும் அரசு நிகழ்ச்சிதான். எனவேதான் இதன் விளம்பர பதாகைகளில் அரசு சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளது. எனவே இங்கு தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்.

சேகர் பாபுவிடம் கோரிக்கை

சேகர் பாபுவிடம் கோரிக்கை


இன்று தமிழ்தாய் வாழ்த்து பாடாதது வருத்தமளிக்கிறது. இனி நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ் தாய் வாழ்த்தை பாடுவது அவசியம். இதை வரும் நாட்களில் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என அறநிலையத்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன். இங்கு பொறுப்பேற்றவர்கள் கோயில் அறங்காவலர்களை நியமிக்கையில் சரியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்.

சரியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்

சரியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்

மதுவுக்கு அடிமையானவர்கள், கோயில் நிலத்தை அபகரிப்பவர்கள் போன்றவர்களை எல்லாம் அறநிலையத்துறை பொறுப்புகளில் அமர்த்தவே கூடாது. அப்படி செய்தால் உங்களுக்கு வழங்கப்பட்ட பதவியை நாங்கள் பறித்துக்கொள்வோம். அவரவர் சாதியை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என்று முயற்சித்தால் இந்த வேலையே நாசமாகிவிடும். செல்லியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை புதிய பேருந்து நிலையத்துக்கு கொடுத்தால் அதை நவீனமயமாக்க முடியும்." என்றார்.

English summary
Minister Duraimurugan condemns for Boycotting Tamilthai song in Aranilayathurai event: மாவட்ட அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடாதது ஏன் என அமைச்சர் துரைமுருகன் மேடையிலேயே கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X