வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பரபரத்த வேலூர் நீதிமன்றம்.. சொத்து குவிப்பு வழக்கு.. நேரில் ஆஜரானார் அமைச்சர் பொன்முடி

Google Oneindia Tamil News

வேலூர்: சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக அமைச்சர் பொன்முடி தனது மனைவியுடன் நீதிமன்றத்தில் ஆஜராகினார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி கடந்த 2006ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் அவர்கள் இன்று ஆஜராகினர்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி கடந்த 2006ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக தனது மனைவியுடன் ஆஜராகியுள்ளார்.

லிமிட் இல்லை.. 50% க்கும் அதிகமாக இடஒதுக்கீடு வழங்கலாம்! நீதிபதி வழங்கிய மிக முக்கிய தீர்ப்புலிமிட் இல்லை.. 50% க்கும் அதிகமாக இடஒதுக்கீடு வழங்கலாம்! நீதிபதி வழங்கிய மிக முக்கிய தீர்ப்பு

நீதிமன்றத்தில் விசாரணை

நீதிமன்றத்தில் விசாரணை

இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில் சில மாதங்களுக்கு ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. சரவணன் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

சாட்சிகளிடம் தீவிர விசாரணை

சாட்சிகளிடம் தீவிர விசாரணை

இதேபோல் ஏப்ரல் மாதத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதையடுத்து மற்ற சாட்சிகளின் விசாரணைக்காக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

அமைச்சர் பொன்முடி ஆஜர்

அமைச்சர் பொன்முடி ஆஜர்

இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக தனது மனைவி விசாலாட்சியுடன் நேரில் ஆஜராகியுள்ளார். இதனால் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பலரின் கவனத்தை திருப்பியுள்ளது.

விரைவில் தீர்ப்பு?

விரைவில் தீர்ப்பு?

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமைச்சர் பொன்முடி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Minister Ponmudi has appeared in the court along with his wife for the hearing of the property case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X