வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆன்லைனில் ஆர்டர்! பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்திருந்த போன் வெடித்து சிதறியது.. மாணவன் கதி?

Google Oneindia Tamil News

ராணிப்பேட்டை: வேலூரை அடுத்த ராணிப்பேட்டையில் பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியதில் மாணவன் ஒருவன் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை சார்ஜ் போடப்பட்ட செல்போன்கள் தான் வெடித்து இருக்கின்றன. ஆனால் முதன்முறையாக சார்ஜரில் இணைக்கப்படாத செல்போன் ஒன்று வெடித்திருப்பது தான் இந்த அச்சத்துக்கு காரணம் ஆகும்.

தொழில்நுட்பம் வளர வளர விதவிதமான அதிநவீன எலக்ட்ரானிக் சாதனங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறு முதலில் பட்டன் ஃபோன்களாக நம் கையில் புழங்கி வந்த செல்போன்கள் தற்போது ஸ்மார்ட் ஃபோன்களாக அவதாரம் எடுத்துள்ளன.

பெங்களூர் சம்பவம்! அடுத்த 3 நாட்கள் முக்கியம்! நேரில் வாங்க.. எடப்பாடிக்கு பெங்களூர் சம்பவம்! அடுத்த 3 நாட்கள் முக்கியம்! நேரில் வாங்க.. எடப்பாடிக்கு

ஸ்மார்ட்ஃபோன் ஆபத்துகள்

ஸ்மார்ட்ஃபோன் ஆபத்துகள்

இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் இன்றைய சூழலுக்கு அத்தியாவசியம் ஆகிவிட்டது என்ற போதிலும், அது ஆபத்தானதும் கூட என்பதை யாரும் மறுக்க முடியாது. இதில் இரண்டு வகை ஆபத்துகள் உள்ளன. ஒன்று மறைமுகமானது. இன்னொன்று வெளிப்படையானது.

மறைமுகமான ஆபத்து என்பது ஸ்மார்ட் ஃபோன்களில் புழங்கும் ஆபாசப் படங்கள், ஆன்லைன் கேம்கள் முதலியவற்றில் இளைஞர்கள் அடிமையாகி கிடப்பது. வெளிப்படையான ஆபத்து என்பது ஒன்றே ஒன்றுதான். அது ஸ்மார்ட் ஃபோன்கள் வெடித்து சிதறுவது.

முதன்முறையாக..

முதன்முறையாக..

ஸ்மார்ட் செல்போன்கள் வெடித்து சிதறுவதும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் சமீபகாலமாக வாடிக்கையாகி விட்டன. இருந்தபோதிலும், இதுவரை சார்ஜரில் இணைக்கப்பட்ட செல்போன்கள்தான் வெடித்திருக்கின்றன. ஆனால், முதன்முறையாக ராணிப்பேட்டையில் சாதாரணமாக வைக்கப்பட்டிருந்த செல்போனே வெடித்திருப்பது மக்களை அச்சமடைய செய்துள்ளது. அதுகுறித்த விபரம் வருமாறு:

ஆன்லைனில் ஆர்டர்

ஆன்லைனில் ஆர்டர்

ராணிப்பேட்டை மாவட்டம் ஷிப்காட்டை அடுத்த தொண்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. தள்ளுவண்டியில் டிஃபன் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் முத்து (16), அங்குள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் ஆன்லைனில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு ஸ்மார்ட் ஃபோனை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று முத்து தனது நண்பனை பார்ப்பதற்காக வாலாஜாபாத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

அப்போது பெரும் சத்தத்துடன் அவர் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்ஃபோன் வெடித்து சிதறியது. இதில் அவர் கீழே விழுந்து அவரது உடையிலும் தீப்பற்றியது. பின்னர் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதையடுத்து படுகாயமடைந்த மாணவனை, அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

English summary
In a unprecedented incident in Ranipet, A Cell phone exploded when it is in pant pocket. Usually smart phones exploded when it was in charger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X