ஆண் குழந்தை ரூ.10 லட்சம், பெண் குழந்தை ரூ.5 லட்சம் - பரபரக்க வைக்கும் ராணிப்பேட்டை குழந்தை விற்பனை
ராணிப்பேட்டை: மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளை மருத்துவமனை ஊழியர்களே விற்பனை செய்வதாக சக ஊழியர் வெளியிட்ட வாட்ஸ் அப் ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்து உள்ளது. இங்கு அண்டை கிராமங்களை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஏராளமான கர்ப்பிணி பெண்களுக்கு இங்கு பிரசவமும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் பணியாற்றும் ரகு என்ற ஊழியர் பேசிய ஆடியோ வாட்ஸ் அப், சமூக வலைதளங்களில் வெளியாகி பலருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகள் விற்பனை
அதில் பேசியுள்ள ரகு, ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களான தனலட்சுமி, பரிமளா, சுப்பிரமணி ஆகியோர் அங்கு பிறக்கும் குழந்தைகளை விற்பனை செய்வதாக பகீர் தகவலை தெரிவித்து இருக்கிறார். ஆண் குழந்தைகளாக இருந்தால் ரூ.10 லட்சத்திற்கும், பெண் குழந்தை என்றால் ரூ.5 லட்சத்திற்கும் விற்பனை செய்ததாக கூறியுள்ளார்.

ஊரடங்கில் ரூ.5 லட்சத்துக்கு விற்கப்பட்ட பெண் குழந்தை
குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா ஊரடங்கின் போது பிறந்த பெண் குழந்தையை மருத்துவமனை ஊழியர்கள் ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்ததாகவும், அதற்கான ஆதாரங்களை மாற்றிவிட்டதாகவும் ரகு குற்றம்சாட்டியுள்ளார்.

என் உயிருக்கே ஆபத்து
இந்த உண்மை தற்போது தன் மூலமாக வெளிவந்துள்ள நிலையில், குழந்தையை விற்ற ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறும் ரகு, இதனால் கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதை அடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது
இதுகுறித்து தெரிவித்துள்ள மாவட்ட சுகாதார அலுவலர் மணிமாறன், 4 குழுக்கள் அமைத்து தற்போது விசாரணை மேற்கொண்டு இருப்பதாகவும், அதில் ரகு வெளியிட்ட ஆடியோவில் இருக்கும் புகாருக்கான முகாந்திரம் உள்ளதாகவும், கூடிய விரைவில் விசாரணை முடிவடைந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications