2026 சட்டமன்ற தேர்தலில்.. காஞ்சிபுரம்+வேலூரில் வெற்றி யாருக்கு? சத்தியம் டிவி கருத்து கணிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்னும் 8 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தேர்தலுக்கு முன்னோட்டமாக கருத்துக்கணிப்பை செய்தி ஊடகங்கள் வெளியிட தொடங்கியுள்ளன. தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் வேலூரில் உள்ள 5 தொகுதிகளிலும் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து சத்தியம் டிவி கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது.
சத்தியம் டிவி, மக்களிடமிருந்து கருத்துகளை பெற்று தற்போது கணிப்புகளை வெளியிட்டிருக்கிறது. இரவு 9.30 மணி நிலவரப்படி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், அரியலூர், தேனி, கோவை, திண்டுக்கல், வேலூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை,

1. ஆலந்தூர்
2. காஞ்சிபுரம்
3. ஸ்ரீபெரும்புதூர்
4. உத்திரமேரூர்
என 4 தொகுதிகள் இருக்கின்றன. கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஸ்ரீபெரும்புதூர் தவிர மற்ற தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வசம் வந்தது. இதே 2021ல் அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.
2016ல் உத்திரமேரூரை அதிமுக கூட்டணியும் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளை திமுக கூட்டணியும் கைப்பற்றும் என கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ஆலந்தூர் தொகுதியில் இழுபறி நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வேலூர்
ஆந்திராவை எல்லையாக பகிர்ந்துக்கொண்டிருக்கும் வேலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி அதிக அளவில் இருக்கிறது. ஆனால், கல்வியில் மட்டும் இன்னமும் தொடர்ந்து பின்தங்கி வருகிறது. இந்த மாவட்டத்தில்
1. வேலூர்
2. காட்பாடி
3. குடியாத்தம்
4. கே.வி. குப்பம்
5. அணைக்கட்டு
என 5 தொகுதிகள் இருக்கின்றன. 2016ல் குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் தொகுதிகளை அதிமுக கூட்டணியும், மற்ற தொகுதிகளை திமுக கூட்டணியும் கைப்பற்றியிருந்தது. 2021ல் கே.வி.குப்பம் தவிர அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது. 2026ல் அணைக்கட்டு மற்றும் கே.வி.குப்பம் தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றும் என்றும் மீதமுள்ள தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றும் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications