கொல்ல வந்தாலும் மன்னிப்பேன்.. துரோகம் செய்வோரை மன்னிக்கவே மாட்டேன்.. வேலூரில் துரைமுருகன் வேதனை
வேலூர்: என்னை கொல்ல வந்தாலும் மன்னிப்பேன் ஆனால் எனது இயக்கத்திற்கு (திமுகவிற்கு ) கட்சிக்கு துரோகம் செய்வோரை மன்னிக்க மாட்டேன் என திமுக பொதுச்செயலாளரும், தமிழக அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தார். போன முறை நான் எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து இருந்தேன் அதன் விளைவாக சில பாடங்களை கற்றுக்கொண்டேன். அந்த பாடங்களை நான் மறக்க மாட்டேன் என்றும் துரைமுருகன் கூறினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் துரைமுருகன் இன்று பேசுகையில், தேர்தல் எப்படி நடக்கும், எப்படி நம்ம கட்சியில் வியூகம் வகுப்பார்கள், எப்படி எதிர்க்கட்சியில் வியூகம் வகுப்பார்கள் என்பது எனக்கு தெரியும். நான் ஒவ்வொருரை பற்றியும் இங்கு நன்கு தெரிந்து வைத்துள்ளேன்.. என்னை இனி யாரும் ஏமாற்ற முடியாது. போன முறை நான் ஏமாந்துவிட்டேன். அது கொரோனா காலத்தில் நடந்தது. அப்போது என்னால் வெளியில் வேகமாக வரவும் போகவும் முடியவில்லை. இல்லை என்றால் நான் கண்ணில் விரலை விட்டு ஆட்டி இருப்பேன்.

சில துரோகங்களை எனக்கு சிலர் சேர்ந்து நடத்தினார்கள். . ஆனால், அது எனக்கு தெரியும். துரோகிகளை களையெடுத்துவிட்டு தேர்தலை வெற்றிகரமாக நடத்திக்கூடிய ஆற்றல் இந்த துரைமுருகனுக்கு உண்டு.. என்பதை நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.. நான் யாரையும் மன்னிப்பேன். ஆனால் கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்க மாட்டேன்.
என்னையே கொல்ல வந்தால் கூட மன்னிப்பேன். ஆனால் என் இயக்கத்திற்கு (திமுக) துரோகம் செய்வோரை நான் மன்னிக்கவே மாட்டேன்..
60- 70 ஆண்டுகள் இந்த கட்சியை நான் வளர்த்தவன் . ஆகையால் இது எனது கட்சி, நம்முடைய கட்சி என்ற புத்தியோடு இருக்கிறேன். அந்த கட்சிக்கு துரோகம் செய்பவதை விட வேறு கொடுமை இருக்க முடியாது. போன முறை நான் எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து இருந்தேன். அதனால் சில பாடங்கள் கற்றுக்கொண்டேன். அந்த பாடத்தை திரும்பி பார்க்க மாட்டேன்" இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

துரைமுருகன் பேச்சு ஒரு புறம் எனில், வேலூர் மாவட்டத்தை திமுகவினர் சிலர் திடீரென கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கலகத்தில் இணைந்துள்ள சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்ட தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் நேற்று திடீரென குடியாத்தம் பகுதியை சேர்ந்த திமுகவினர் உள்பட பலர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர், இந்நிலையில் இன்னும் பலர் திமுகவிலிருந்து தவெகவிற்கு வர உள்ளதாக தவெக வேலூர் மாவட்ட பொறுப்பாளர் வேல்முருகன் தெரிவித்திருக்கிறாராம்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?











Click it and Unblock the Notifications