போன வாரம் தான் குழந்தை.. மாணவியை சீரழித்த பேக்கரி மாஸ்டர்! கை கட்டி வாயை பொத்தி.. வெலவெலத்த வேலூர்!
வேலூர் : வேலூர் அருகே வேலைக்கு சென்று விட்டு தந்தைக்காக காத்திருந்த பெண்ணை கை மற்றும் வாயைக் கட்டி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கொடூரனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் அடுத்த கத்தாரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் , அவர் அணைக்கட்டு பகுதியில் இருக்கும் தனியார் பேக்கரி கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகின்றார்.
மேலும் திருமணமான இவருக்கு கடந்த வாரம்தான் பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் குடியாத்தம் அரசு கல்லூரியில் பி.ஏ தமிழ் படித்து வருகிறார்.

மாணவி
மேலும் மாணவி வார நாட்களில் கல்லூரிக்கு செல்வதும் சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் ஒடுகத்தூர் பகுதியில் உள்ள ஓர் தனியார் துணிக்கடையில் தன் படிப்பு செலவிற்காக பணிபுரிந்தும் வந்துள்ளார். மேலும் அவ்வாறு பணிக்கு செல்லும் நாட்களில் ஒடுக்கத்தூரில் இருந்து கத்தாரி குப்பம் பகுதிக்கு பேருந்தில் கத்தரிகுப்பம் பேருந்து நிலையத்திலிருந்து அவரின் தந்தை வீட்டிற்கும் அழைத்து செல்வது வழக்கம்.

பேக்கரி மாஸ்டர்
வழக்கம்போல நேற்று இரவு பணிக்கு சென்று விட்டு இரவு 8:30 மணியளவில் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் வந்து கத்தரிக்கும் பகுதியில் இறங்கியுள்ளார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இவரை அழைத்துச் செல்ல நேற்று அவரின் தந்தை வரவில்லை அந்த நேரத்தில் இவரைப் பார்த்து பின் தொடர துவங்கிய பேக்கரி மாஸ்டர் சரத்குமார் செல்லும் வழியில் உள்ள வாழை தோட்டத்தின் அருகே செல்லும்போது சிறுமியிடம் இருசக்கர வாகனத்தில் ஏறுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இரவில் மிரட்டல்
இதை பொருட்படுத்தாமல் சிறுமி சென்று கொண்டே இருக்க மேலும் விடாமல் துரத்திச் சென்று சிறுமியின் கையைப் பிடித்து இருசக்கர வாகனத்தில் ஏறுமாறு வற்புறுத்தியுள்ளார் அப்பொழுது அந்த வழியாக வந்த இரண்டு நபர்கள் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்ததை பார்த்து அவரிடம் கையை விடு என கூறியதற்கு உன் வேலையை பார்த்து செல் என அவர்களிடம் தெரிவித்தும் உடனடியாக நீங்கள் செல்லவில்லை என்றால் உங்களை என்ன செய்வேன் என்று தெரியாது எனவும் மிரட்டி உள்ளார் இதனால் பயந்த அந்த இருவரும் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டனர்.

பாலியல் பலாத்காரம்
இதனைத் தொடர்ந்து உதவி கேட்டு சிறுமி கூச்சலிடவே உடனடியாக சிறுமியின் வாயை பொத்திக்கொண்டு அருகில் இருந்த வாழைத்தோட்டத்திற்குள் தரதரவென இழுத்துச் சென்று சிறுமி சத்தமிடாமல் இருப்பதற்காக வாயில் துணியை வைத்து அடைத்தும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார் அந்தக் காமக்கொடூரன். மேலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அடுத்தடுத்து மீண்டும் மீண்டும் சிறுமியிடம் பலாத்காரத்தில் ஈடுபட்ட பின் சிறுமியிடம் இதை உன் வீட்டில் சொன்னால் உன்னை கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

கைது
அங்கிருந்து அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற சிறுமி தன் பெற்றோரிடம் இது குறித்து தகவல் தெரிவிக்கவே அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர்கள் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் இரவு 12 மணி அளவில் தகவல் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வேப்பங்குப்பம் போலீசார் சரத்குமாரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து சிறையில் அடைத்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications