வெளிநாட்டு பேச்சு! தீவிரவாத கும்பலுடன் தொடர்பு? நள்ளிரவில் சுற்றி வளைத்த உளவுத்துறை! அலறிய ஆம்பூர்.!
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி கல்லூரி மாணவனை மத்திய உளவுத்துறையினர், தமிழக ஐபி போலீசாருடன் இணைந்து கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் காஷ்மீர் விவகாரத்தின் போதும், தற்போதும் அங்கு காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் காஷ்மீர் பண்டிட்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதேபோல இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கும் சில இளைஞர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் வெளிநாட்டில் இருக்கும் பயங்கரவாத கும்பல்களிடம் பழகி ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.

தேசிய புலனாய்வு முகமை
இதனையடுத்து nia எனப்படும் தேசிய புலனாய்வு முகமை , உளவுத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை சமூக வலைதளங்கள் மூலம் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களுடன் பேசியதாகவும் அவர்களது இயக்கங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

சைபர் கிரைம் போலீசார்
அந்த தகவல்களின் படி மறைமுகமாக சமூக வலைதளங்களை சைபர் கிரைம் போலீசார் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஒரு இளைஞர் அடிக்கடி வெளிநாட்டு மர்ம நபர்களுடன் தொலைபேசியில் பேசி வருவதாகவும் பயங்கரவாத அமைப்புகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. அந்த நபரை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

மாணவன் கைது
இந்நிலையில் திருப்பத்தூர்மாவட்டம்,ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெருவில் இன்று அதிகாலை டெல்லி மத்திய உளவுத்துறை, ஐபி போலீசார் மற்றும் வேலூர் ஐபி, திருச்சி ஐபி , திருப்பத்தூர் கியூ பிரான்ச் போலீசார் ஆம்பூர் உள்ள ஒரு கல்லூரி மாணவனை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்த விலை உயர்ந்த 2 வெளிநாட்டின் செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.

தீவிரவாதிகளுடன் தொடர்பு?
பயங்கரவாத இயக்கங்களுடன் அவருக்கு தொடர்பிருந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாகவும், விசாரணையில் அந்த மாணவர் நீலிக்கொல்லை மசூதி தெரு பகுதியை சேர்ந்த அணர் அலி வயது என்பதும், ஆற்காடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துக் கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக வந்த தகவலின் அடிப்படையில் மத்திய உளவுத்துறை போலீசார் அணர் அலியை கைது செய்து அழைத்து சென்றதாக உள்ளூர் போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications