For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மது விற்றவரிடம் லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் கையும் களவுமாக கைது- வீடியோ

By Veera Kumar
Google Oneindia Tamil News

கரூர்: கடந்த 19ம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. எனவே மாவட்டம் முழுக்க அன்று மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குளித்தலை காவல்துறை ஆய்வாளர் குருநாதன், உளவுப்பிரிவு சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர், தடையை மீறி மது விற்ற முருகனை கைது செய்தனர். ஆனால் சாதாரண பிரிவில் வழக்கு பதிவு செய்ய நாகராஜன் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையிடம் முருகன் தெரிவித்தார். அதன், துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் ஒரு ஐடியா செய்து, ரசாயனம் தடவிய ரூ.3500 நோட்டுக்களை கொடுத்தனர். அதை நாகராஜனிடம் முருகன் கொடுத்தபோது, கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகராஜனை கைது செய்தனர். கரூர் நீதிபதி முன்பு நாகராஜன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு டிசம்பர் 7வரை நீதிமன்ற காவல் விதித்துள்ளது நீதிமன்றம்.

English summary
Anti bribery police has been arrested police sub inspector in Karur district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X