ஜல்லிக்கட்டு... சட்ட சிக்கலை மத்திய அரசு நீக்க வேண்டும்: வாசன் கோரிக்கை - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமாகா மாவட்ட தலைவர்கள் கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் முன்னோட்டப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வாசன், "மத்திய அரசு ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு என்ற மிக முக்கியமான நடவடிக்கையை எடுத்து உள்ளது. ஆனால் சாதாரண மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள்" என்றார். மேலும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதில் சட்ட சிக்கல் உள்ளது என மத்திய அரசு கூறி வருகிறது. அப்படியென்றால் முறையான கொள்கை முடிவுகள் எடுத்து, அதனை நடைமுறைப் படுத்தினால், அதற்கு நீதிமன்றம் எவ்வித தடையும் விதிக்க முடியாது என வாசன் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The TMC president Vasan demanded the central government to clear all the curdles on Jallikattu.
Please Wait while comments are loading...