வலுவிழந்தது ‘நாடா’... தமிழகம்-புதுச்சேரியில் 48 மணி நேரம் மிதமான மழைக்கு வாய்ப்பு- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் இலங்கை அருகே நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்ததாழ்வுப் பகுதியாக ''நாடா'' உருவானது. நேற்று அதிகாலை அது புயலாக மாறி மிகவும் வலுவான நிலையை அடைந்தது. இன்று காலை நாடா புயல் தமிழக கடலோரப் பகுதியை நெருங்கி வந்தது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று மதியத்துக்குப் பிறகு தமிழக கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று காலை 'நாடா' புயலின் நகர்விலும், வேகத்திலும் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அந்தப் புயல் வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம்-புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Cyclone Nada, heading towards Tamil Nadu and Puducherry in the Bay of Bengal, is weakening and may make landfall in the very early hours of Friday near Cuddalore.
Please Wait while comments are loading...