ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம்.. சேலத்தில் இயற்கை மருத்துவரை அடித்துக் கொன்ற மனைவி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் அருகே வெள்ளக்கல் பட்டியைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் சதாசிவம். இவர் தனது வருமானத்தில் பாதியை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதில் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி, சதாசிவத்திடம் சண்டை போட்டுள்ளார். அப்போது மனைவி அடித்துத் தள்ளியதில் கீழே விழுந்த சதாசிவம் தலையில் காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ:

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 45-year-old woman killed her husband following a quarrel at their residence at Suramangalam in Salem.
Please Wait while comments are loading...