சுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை
விழுப்புரம்: திண்டிவனம் அருகே பண்ணை குட்டையில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அடுத்த கம்பூர் கிராமத்தை சேர்ந்த முருகன்-மேகலா தம்பதியரின் பெண் குழந்தை ரித்திகா (4). இவர் இன்று ஒரு சில குழந்தைகளுடன் அருகே உள்ள பண்ணைக் குட்டையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ரித்திகா நீரில் மூழ்கியுள்ளார். சக குழந்தைகள் கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் தகவல் அறிந்ததும், ஓடிப்போய், குழந்தையை பண்ணை குட்டையிலிருந்து மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தையை திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்திலேயே அழைத்து சென்றனர்.
மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, 4வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சோக வடுக்களே ஆறாத நிலையில், மற்றொரு பிஞ்சு குழந்தை இப்படி அநியாயமாக உயிரை இழந்துள்ளது. பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் உலகம் உள்ளது என்பதை அறிவார்களா?
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications