ஒரே கட்சி ஒரே கோஷ்டி..CV சண்முகம் கட்சி மாற மாட்டார்! அதிமுக தலைமை மாறனும்! அண்ணனின் விழுதுகள் ஷாக்!
விழுப்புரம்: கட்சியை விட்டு விலகும் எண்ணம் தனக்கோ, தனது ஆதரவாளர்களுக்கோ இல்லை. "ஒரே கட்சி, ஒரே கோஷ்டி" என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து அதிமுகவிலேயே இருப்போம் என கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தின் ஆதரவாளரான சுரேஷ்பாபு பாபு. மேலும், சிவி சண்முகம் கட்சி மாற மாட்டார்.. அதிமுகவின் தலைமை தான் மாற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிவி சண்முகம் தவெகவில் இணையப் போவதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வந்த நிலையில், சுரேஷ்பாபு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் 2021-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட விஜயாவின் கணவரும், அதிமுக முன்னாள் கோலியனூர் ஒன்றியச் செயலாளருமான சுரேஷ்பாபு, விழுப்புரம் அருகே சகாதேவன்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளரான அவர் பேசிய போது," 1991-ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் கிளைச் செயலாளர், மாணவர் அணி ஒன்றியச் செயலாளர், மாவட்டப் பேரவை துணைச் செயலாளர், ஊராட்சிமன்றத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளேன்.
சுரேஷ்பாபு
எனது மனைவி விஜயாவும் விழுப்புரம் ஒன்றியக் குழுத் தலைவராகவும், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராகவும் பணியாற்றினர். கட்சிக்காக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து உழைத்து, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட அனைத்து கட்சி நிகழ்ச்சிகளிலும் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் தொடர்ந்து பங்கேற்று வந்தோம். 2021 சட்டமன்றத் தேர்தலில் தனது மனைவிக்கு வாய்ப்பு வழங்கிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு நன்றி.
சி.வி. சண்முகம்
அந்த தேர்தல் தோல்வி இயல்பான தோல்வி அல்ல. கட்சிக்குள் இருந்த சிலரின் செயல்பாடுகளால் தோற்கடிக்கப்பட்டார். தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்தபோது, நேரடியாக போட்டியிட்ட வேட்பாளர்களின் கருத்துக்களை கூட கேட்காமல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பசுபதி கடந்த காலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தவர். முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் உதவியால் தான் அவர் அரசியலில் உயர்ந்ததார்.
எடப்பாடி பழனிசாமி
பின்னர் அதே தலைவருக்கு எதிராக செயல்பட்டார். 2011, 2016 மற்றும் 2021 தேர்தல்களிலும் கட்சிக்குள் மறைமுக சதிகள் நடைபெற்து. சில நிர்வாகிகள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை இல்லாமால், தற்போது கட்சிக்கு புதிய தலைமை தேவை. தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் தலைமை மாற்றத்தை விரும்பி வருகின்றனர். தற்போதைய தலைமை தொடர்ந்தால் கட்சி மேலும் பாதிக்கப்படும்.
ஒரே கட்சி, ஒரே கோஷ்டி
சி.வி. சண்முகத்தை பொதுச்செயலாளராக பரிந்துரைக்கவில்லை. அவர் அந்த பதவியை விரும்புபவர் அல்ல. தற்போதைய தலைமையை தவிர வேறு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். கட்சியை விட்டு விலகும் எண்ணம் தனக்கோ, தனது ஆதரவாளர்களுக்கோ இல்லை. "ஒரே கட்சி, ஒரே கோஷ்டி" என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து அதிமுகவிலேயே இருப்போம். தன்னிடம் கட்சி தொடர்பான பல்வேறு ஆவணங்கள், பதிவுகள் மற்றும் ஆதாரங்கள் உள்ளது.
அதிமுக தலைமை
தாம் கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யென யாராவது நிரூபித்தால் அதற்கான பொறுப்பை ஏற்கத் தயார். தற்போதைய அதிமுக தலைமை மாற்றப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. கட்சியின் எதிர்கால நலனுக்காக அந்த மாற்றம் அவசியம்" என்றார்.


Click it and Unblock the Notifications
