6000 பேருக்கு வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் விழுப்புரம் லோட்டஸ் காலணி பூங்கா.. சிறப்புகள் என்ன?
விழுப்புரம்: விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய காலணி பூங்கா மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
வேலைவாய்ப்பின்மையை போக்க முதல்வர் ஸ்டாலின் தொழில் துறைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் துபாய் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின் வரும்போது ரூ 6100 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்து வந்தார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய தினம் 38 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 42 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.

ரூ 500 கோடி
அது போல் திண்டிவனத்தில் பெலாகுப்பத்தில் 167.41 ஏக்கரில் ரூ 500 கோடி மதிப்பிலான லோட்டஸ் காலணி தொழிற்சாலை அமைகிறது. இதன் மூலம் 6000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்த நிறுவனம் தைவான் நாட்டை சேர்ந்ததாகும். இது ஏற்கெனவே செய்யாறு சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் அமைந்துள்ளது.

பொருளாதாரம்
தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் கோடி டாலராக உயர்த்துவதே தனது இலக்கு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அந்த வகையில் தொழில் வளர்ச்சி பெறுவதற்கான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மேலும் தோல் அல்லாத காலணிகள்தான் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கிடும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

தொழில் வளர்ச்சி இல்லாத மாவட்டம்
அது போல் தொழில் வளர்ச்சி இல்லாத மாவட்டங்களில் அதிக தொழிற்சாலைகளை அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்கா அமைக்கப்படுகிறது. சிப்காட் பகுதியில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ரூ 1000 கோடி மதிப்பீட்டில் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது.

பர்னிச்சர் தொழில்
பர்னிச்சர் தொழிலுக்கு என நாட்டிலேயே முதல் சிறப்பு பொருளாதார மண்டலமாக இந்தப் பூங்கா அமைகிறது. மர அரவை ஆலை, பர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 100 நிறுவனங்கள் வரை இந்தப் பூங்காவில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாக சுமார் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிகிறது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications