"நான்தான் ஹேமலதா, அப்பா அம்மா வேணும்.." செஞ்சி சிறுமியின் ஏஐ வீடியோ! கண்ணீர் வடிக்கும் தாய்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம் : செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் காணாமல் போன 7 வயது சிறுமி ஹேமலதா பேசுவது போல் ஏஐ வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்த்து அவரது தாய் பவானி கண்ணீர் வடிக்கிறார்.

செஞ்சி சிறுமி பேசுவது போல் உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோவில், "நான்தான் ஹேமலதா! நான் என் அப்பா, அம்மாவை பார்க்க வேண்டும், நான் எங்கே இருக்கேனு சீக்கிரம் கண்டுபிடிங்க" என உள்ளது. இந்த வீடியோ பார்த்து தாய் பவானி கண்ணீர் வடிக்கிறார்.

gingee cbcid

சிறுமி மாயம்

செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல்- பவானி தம்பதியின் இளைய மகள் ஹேமலதா (7). இவர் கடந்த அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிவிட்டு இரவு தனது தாயுடன் தூங்கிக் கொண்டிரு்தார்.

சிறுமியை காணவில்லை

இந்த நிலையில் 12 ஆம் தேதி அதிகாலை சிறுமியை காணவில்லை என தாய் அலறி அடித்துக் கொண்டு தேடினார். பிறகு அந்த பகுதி முழுவதும் தேடியும் சிறுமி கிடைக்காததால் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீஸார் விசாரணை

புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். கிணறுகள், நீர் நிலைகள், கரும்பு காடு, வயல்வெளிகளில் டிரோன் உதவியுடன் தேடினர். ஆனாலும் சிறுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த வழக்கு கடந்த மாதம் 21 ஆம் தேதி சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடி டிஎஸ்பிக்கள்

இதை யடுத்து சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் கீதா, வேல்முருகன், இன்ஸ்பெக்டர் ரேவதி உள்ளிட்டோர் ஆலம்பூண்டியில் முகாமிட்டு சிறுமியை தேடி வருகிறார்கள். சிறுமியின் தாய், தந்தை, மூத்த சகோதரி, அவருக்கு பார்த்த மாப்பிள்ளை உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

25 நாட்களாச்சு

இந்த நிலையில் சிறுமி காணாமல் போய் 25 நாட்களாகியும் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை. ஆனால் அவர் உயிருடன் இருப்பதாகவே கூறப்படுகிறது.

சிறுமியை நாமக்கல்லில் பார்த்தாகவும், கடலூர் மாவட்டம் புவனகிரியில் பார்த்ததாகவும் பலர் தெரிவிக்கிறார்கள். இதையடுத்து போலீஸார் அந்த பகுதிகளுக்கு விரைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஒரு பெண்ணுடன் வந்து யாசகம் கேட்ட சிறுமி, பார்ப்பதற்கு செஞ்சி சிறுமியை போல் இருப்பதாக சொல்கிறார். அது போல் நாமக்கல்லில் தத்தகிரி முருகன் கோயில் அருகே சிறுமியை ஒரு முதியவர், 35 வயது மதிக்கத்தக்க நபருடன் பார்த்ததாக அங்கன்வாடி சமையலர் பவானி (சிறுமியின் தாய் பெயரும் பவானிதான்) தெரிவித்துள்ளார்.

காணாமல் போன போது அணிந்திருந்த உடை

சிறுமி காணாமல் போன போது என்ன உடை அணிந்திருந்தாரோ அதே உடையுடன் தான் பார்த்ததாக அந்த பெண் கூறியதை அடுத்து தத்தகிரி முருகன் கோயிலை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சிறுமி எங்கே இருக்கிறார் என்பது குறித்து அவரது குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.

விநாயகர் கோயில்

மேலும் தாய் பவானி, தனது குழந்தை எப்படியாவது கிடைத்துவிட வேண்டும் என்பதற்காக தினமும் ஊரில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று வேண்டி வருகிறார். குழந்தை கிடைக்காததால் தங்களால் நிம்மதியாக சாப்பாட கூட சாப்பிட முடியவில்லை என்கிறார். மேலும் குழந்தை காணாமல் போன விவகாரத்தில் தன்னை பலரும் பலவிதமாக பேசுவதாக கண்ணீர் வடிக்கிறார்.

தாய் வேதனை

பெற்ற குழந்தையை தானே தூக்கி கொடுத்ததாக சொல்கிறார்கள், யூடியூப் சேனல்களில் இஷ்டத்திற்கு தன்னை பற்றி போடுகிறார்கள். இது தனக்கு மனவேதனையை தருகிறது என வேதனை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+