கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர்: அப்பா பேரைக் காப்பாற்றுவாரா மகன்?

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் கவுதம சிகாமணி.

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக போட்டியாளராக களமிறங்குகிறார் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனான கவுதம சிகாமணி.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் கவுதம சிகாமணி. மருத்துவரான இவர், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் ஆவார். 1992ம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வரும் சிகாமணி, 2005ம் ஆண்டு முதல் ஸ்டாலின் நற்பணி மன்றத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். திமுக சார்பில் இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ரத்த தான முகாம் உள்ளிட்ட சமூக நலப்பணிகளிலும் நீண்டகாலமாக இவர் ஈடுபட்டு வருகிறார்.

gowthama sigamani kallakurichi dmk candidate biodata

இந்நிலையில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி வேட்பாளராக திமுக இவரை அறிவித்துள்ளது.

இந்தத் தொகுதியில் தான், தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்தின் மைத்துனரான எல்.கே.சுதீஷ் அதிமுக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே, சிகாமணிக்கும், சுதீஷுக்கும் இடையே வாக்குகளைப் பெறுவதில் பெரும் போட்டி இருக்கும் என கருதப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் காமராஜ், திமுக வேட்பாளர் மணிமாறனை தோற்கடித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+