இவர் எனக்கு ஊற்றி கொடுத்தாரா.. கூவத்தூரில் எல்லாருக்கும்தானே கொடுத்தார்: சி.வி. சண்முகம் ஷாக் பேச்சு

டிடிவி தினகரன் மீது சிவி சண்முகம் சரமாரி குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: மொதல்ல சசிகலா, இந்த டிடிவி தினகரனிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சிவி சண்முகம் அறிவுறுத்தி உள்ளார்.

விழுப்புரத்தில் சமூக நலத்துறை சார்பாக பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் விழா காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் நடைபெற்றது.

 கார்

கார்

இதில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "சசிகலா அதிமுக கொடியை கட்டி கொண்டு தமிழகத்திற்குள் காரில் வந்த சம்பவத்தில், சட்டம் நிச்சயம் தனது கடமையை செய்யும். சசிகலாவுக்கு இதை ஒரு எச்சரிக்கையாகவே சொல்கிறேன்.

 திருமதி சசிகலா

திருமதி சசிகலா

அதேபோல, அதிமுகவை கைப்பற்றுவோம் என்று டிடிவி தினகரன் சொல்லிட்டு வர்றார்.. நீ எங்க அதிமுகவை கைப்பற்றது இருக்கட்டும், முதல்ல திருமதி சசிகலா அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை சொல்றேன், உங்களை காப்பாத்திக்குங்க, இந்த தினகரன்கிட்ட இருந்து.

தினகரன் சொல்வார் அடிக்கடி ஸ்லீப்பர் செல், ஸ்லீப்பர் செல்ன்னு... ஓபன் செல்லையே நாங்கள் வெச்சிருக்கிறோம்.. ஓபன் செல் யாருன்னா இந்த டிடிவி தினகரன்தான்.. தினகரன் கிட்ட இருந்து சசிகலாவையும், அவங்க குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளட்டும். ஏன்னா, டிடிவி தினகரனை நம்பிதான் கட்சியும் ஆட்சியும் எல்லாத்தையும் திருமதி சசிகலா ஒப்படைத்து விட்டு சென்றார்.. ஆனால், ஒரே மாசத்தில் கட்சியை டிடிவி உடைத்தார்..

நிதானம்

நிதானம்

முதலில் அவரது குடும்பத்தில் ஒற்றுமையை காப்பாத்திக்கிட்டும். அப்பறம் இன்னொன்னு என்னை பத்தி இவர் பேசிட்டு வர்றார்.. நிதானமா பேசிறேனான்னு கேட்கிறார்... இவர்தான் எனக்கு ஊற்றி தந்தாரா? குடிச்சிட்டு பேசறேன்னு சொல்றார்.. கூவத்தூரில் எனக்கு ஊற்றி கொடுத்தார், எல்லோருக்கும்தான் ஊத்தி கொடுத்தார், இல்லைன்னு அவரை சொல்ல சொல்லுங்க பார்ப்போம்.

இடமில்லை

இடமில்லை

அதிமுக ஒன்றரை கோடி தொண்டரின் உழைப்பு, ரத்தத்தில் உருவாகியது.. இதில், சசிகலா, அவர் குடும்பத்திற்கு இடமில்லை.... எந்த காலத்திலும், எந்த சூழலிலும் சசிகலா குடும்பத்திற்கு அதிமுக அடிமையாக இருக்காது' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+