அமைச்சர் மஸ்தான் மகனுக்கு தேர்தலில் போட்டியிட சீட்! நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விறு விறு!
விழுப்புரம்: சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பாக 5 முறை செஞ்சி பேரூராட்சி தலைவராக இருந்தவர் செஞ்சி மஸ்தான் என்பது கவனிக்கத்தக்கது.
அமைச்சரின் மகன் தேர்தலில் போட்டியிடவுள்ள தகவலை 3 நாட்களுக்கு முன்பே ஒன் இந்தியா தமிழ் செய்தியாக வெளியிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

செஞ்சி பேரூராட்சி
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கே.எஸ்.மஸ்தானின் மகன் மொக்தியார் செஞ்சி பேரூராட்சியில் 7-வது வார்டில் போட்டியிடுகிறார். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள இவர், செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவியை குறிவைத்து உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கியுள்ளார். அமைச்சர் மஸ்தான் மீது முதல்வர் ஸ்டாலின் கொண்டுள்ள நன்மதிப்பு காரணமாகவே மொக்தியாருக்கு சீட் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் மஸ்தான்
அமைச்சர் மஸ்தான் மற்றும் அவரது மகன் மொக்தியார் ஆகிய இருவரை பொறுத்தவரை மதமாச்சரியங்களை கடந்து அனைத்து சமுதாய மக்களுடன் ஒன்றிணைந்து பயணிக்கக் கூடியவர்கள். கோயில் கும்பாபிஷேகமாக இருந்தாலும் சரி மதரஸா நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி பாகுபாடு பார்க்காமல் கலந்துகொள்ளக் கூடியவர் அமைச்சர் மஸ்தான். இதன் காரணமாகவே சாதாரண டீ மாஸ்டராக இருந்த அவர் இன்று அமைச்சராக உயர்ந்திருக்கிறார்.

மனைவி விண்ணப்பம்
செஞ்சி பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அமைச்சர் மஸ்தானின் மனைவியும் விருப்பமனு கொடுத்திருந்தார். மனைவியிடமு, மகனிடமும் கடந்த வாரம் நேர்காணல் நடத்திய அமைச்சர் மஸ்தான், இறுதியில் மகன் மொக்தியாரை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார். அமைச்சரின் மகன் தேர்தலில் போட்டியிட செஞ்சியில் பெரிதாக எதிர்ப்புகள் எதுவும் எழாதது அவர்களுக்கான பலமாக அமைந்துள்ளது.

கட்சியினர் ஆர்வம்
மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சரின் மகன் என்பதால் செஞ்சி 7-வது வார்டில் மொக்தியாருக்கு ஆதரவாக ஓட்டுக்கேட்டு மொத்தக் கட்சியினரும் களத்தில் இருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தின் மற்றொரு அமைச்சரான பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது கவனிக்கத்தக்கது.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா










Click it and Unblock the Notifications