இரண்டாக பிரிகிறதா பாமக? அன்புமணிக்கு இடியை இறக்கிய ராமதாஸ்.. அறிக்கையில் இருந்தும் பெயர் நீக்கம்!
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் இருந்து செயல் தலைவர் அன்புமணி என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக ராமதாஸின் அறிக்கைகளில் செயல் தலைவர் அன்புமணி என்ற வார்த்தை இடம்பெற்று வந்த சூழலில், தற்போது நீக்கப்பட்டிருப்பது அக்கட்சியினர் மத்தியில் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இருவரும் பிரிந்து தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி செயல் தலைவர் அன்புமணி என்றே ராமதாஸ் கூறி வந்தார்.

அதேபோல் ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும் என்று இருவரும் மாறி மாறி செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் பாமக நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். 21 பேர் கொண்ட புதிய பொறுப்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டார்.
அது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின் ராமதாஸ் தரப்பில், அன்புமணி பாமக நிர்வாகக் குழுவில் இருந்து நீக்கப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. செயல் தலைவராக உள்ள அன்புமணி நிர்வாக குழுவில் தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. பாமக நிர்வாகக் குழுவில் தனது பெயரை உள்ளடக்கி 21 பேர் கொண்ட புதிய பட்டியலை ராமதாஸ் வெளியிட்டார்.
இந்த நிலையில் ராமதாஸ் அறிக்கையில் எப்போதும் செயல் தலைவர் அன்புமணி என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். ஆனால் இன்று வெளியான ராமதாஸின் அறிக்கையில் செயல் தலைவர் அன்புமணி என்ற வார்த்தை நீக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டதாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே நாளை மறுநாள் ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் புதிய நிர்வாகிகள் பங்கேற்கும் செயற்குழு கூட்டம் நடக்கவுள்ளது. அந்த கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், பாமக உட்கட்சி பூசலில் சிக்கி இருப்பது அக்கட்சியினருக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications