தவெக மாநாடு நடக்கும் இடத்திற்கு எப்படி போறதுனு தெரியுமா? அதான் கூகுள் மேப் இருக்கே!
விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விக்கிரவாண்டியின் வி.சாலையில் நடைபெறும் மாநாட்டு இடத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்ற குழப்பமே ஏற்படாத அளவுக்கு பக்காவாக கூகுள் மேம் வழிகாட்டி உள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்னும் ஓரிரு மணி நேரங்களில் தொடங்க போகிறது. இந்த மாநாட்டுக்கு 2 லட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்த கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விதமாக ஆங்காங்கே கியூ ஆர் கோடுகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்கேன் செய்து அதில் விவரங்களை நிரப்பினால் பங்கேற்பு சான்றிதழ் கிடைக்கும்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து வி.சாலைக்கு செல்ல என்எச் 179பியை பயன்படுத்தினால் 3 மணி நேரமாகும். அதிலும் தற்போது போக்குவரத்து நெரிசல் இருப்பதால் பயண நேரம் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாநாடு நடைபெறும் இடத்திற்கு உள்ளே செல்ல இன்று காலை 10 மணிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என சொல்லப்பட்டது.
ஆனால் காலை 6 மணி முதலே கூட்டம் வந்துக் கொண்டிருப்பதால் முன்கூட்டியே மாநாட்டுக்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் வருகை தருவதால் மாநாட்டுக்கு செல்லும் வழிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னையிலிருந்து வரும் வாகனங்கள் திண்டிவனத்திலும் மாற்றி விடப்படுகிறது.
அது போல் திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள் செஞ்சியில் திருப்பிவிடப்படுகிறது. இதனால் பயண நேரம் என்பது கூடுதலாக 15 முதல் 20 நிமிடங்களாகும். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு எப்படி வருவது என்பதை பார்க்கலாம்.
பொதுவாக ஒரு இடத்திற்கு செல்லும் வழி தெரியாவிட்டால் அந்த இடத்திற்கு தாமதமாகும் நிலை உள்ளது. இந்த நிலையில் அந்த மாதிரியான குழப்பங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கூகுள் மேப் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வைத்துக் கொண்டு மாநாட்டு இடத்திற்கு தொண்டர்களும் ரசிகர்களும் பொதுமக்களும் வந்து சேரலாம்.

இதை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் செல்போனில் கூகுள் ஆப்பை ஓபன் செய்யுங்கள்
search என்ற இடத்தில் Tamilaga Vettri Kazhagam or Tamilaga Vettri Kazhagam - TVK Maanadu or TVK Maanadu Stage என்பவை எல்லாம் இருக்கும். அதில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மாநாட்டுக்கான இடம் குறித்த வழிகாட்டி ஓபன் ஆகிவிடும். அதை வைத்துக் கொண்டு உங்கள் பயணத்தை தொடரலாம்.












Click it and Unblock the Notifications