"மக்களின் முதல்வர் எடப்பாடி" கோஷம் ஓய்வதற்குள், "ஐயோ, அம்மா அடி" அலறல்! அதிமுக கோஷ்டிக்குள் அடிதடி
விருதுநகர்: "மக்களின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்க.." என்ற கோஷம் சாலை முழுக்க எதிரொலிக்க .. திடீரென்று, ஐயோ, அம்மா அடிக்கிறார்களே.. என்ற அலறல் சத்தம் விண்ணைப் பிளந்தது ..
இத்தனை களேபரமும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தபோது அரங்கேறியுள்ளது. வீடியோ காட்சிகளை பார்த்தாலே பதறச் செய்யும் வகையில் அங்கு மோதல் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்..

தென்காசி மாவட்டம்
இப்படித்தான், எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தென்காசி மாவட்டதில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு காரில் மதுரை, விருதுநகர் வழியாக இன்று பயணம் செய்தார். தென்காசி செல்லும் வழியில் சாத்தூர் நகர எல்லையில் உள்ள வெங்கடாசலபுரம் நான்கு வழிச்சாலையில் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் எடப்பாடிக்கு வரவேற்பு கொடுத்தனர்.

இரு கோஷ்டிகள்
அப்போது, அங்கு, முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் கோஷ்டியினரும் வந்துள்ளனர். இதை பார்த்து கோபமடைந்த ரவிச்சந்திரன் கோஷ்டியினர், துரோகம் செய்து விட்டு இங்கே ஏன் வந்தீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர். அப்போது ராஜவர்மன் கோஷ்டிக்கும், ரவிசந்திரன் தரப்பினருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது.

கம்புகளால் அடிதடி
தோரண கொடிகளை கட்ட கொண்டு வந்த கம்புகளை வைத்து, ஒருவர் மேல் ஒருவர் அடித்தனர். ஐயோ.. அம்மா.. என்ற அலறல் சத்தம் அங்கே எதிரொலித்தது. முன்னதாக எடப்பாடி கார் வந்தபோது, மக்களின் முதல்வர் எடப்பாடி வாழ்க.. என்று ரவிச்சந்திரன் ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவினர் கோஷம் எழுப்பியபடியே இருந்தனர். சிரித்தபடியே இந்த வரவேற்பை ஏற்றுக் கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.

காவல்துறை பாடு கஷ்டம்
இதனிடையே, எடப்பாடி சென்றதும், மோதிக் கொண்ட இரு தரப்பினரையும், சாத்தூர் காவல் துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். கோஷ்டி சண்டைக்கு இடையே போலீசார் புகுந்து இரு தரப்பையும் விலக்கி விடுவதற்குள் பெரும் பாடுபட்டனர். இந்த மோதலால் சிறிது நேரம் அந்த இடம் பரபரப்பாக இருந்தது.

அமமுக வேட்பாளர் ராஜவர்மன்
சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் ராஜவர்மன். சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் டிடிவி தினகரன் கட்சியான அமமுகவிற்கு தாவினார். தனக்கு சீட் தராத பின்னணியில் உள்ள ராஜேந்திர பாலாஜிக்கு மக்கள் சட்டசபைத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார். காலையில் அமமுகவில் இணைந்த ராஜவர்மனுக்கு மாலையிலேயே சாத்தூரில் நிற்க டிக்கெட் கொடுத்து மகிழ்வித்தது கட்சி தலைமை. ஆனால் தேர்தலில் ராஜவர்மன் தோற்றுப்போனார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்!












Click it and Unblock the Notifications