விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சித்திரை மாத பிரதோஷம்... அமாவாசை...மே 1 வரை சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

சித்திரை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை முன்னிட்டு இன்று முதல் மே 1 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமி கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள

Google Oneindia Tamil News

விருதுநகர்: சித்திரை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையையொட்டி இன்று முதல் மே 1ஆம் தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலையில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு மாதப் பிரதோஷம் அமாவாசை பௌர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

Chithirai Pradosham and Amavasai Devotees are allowed to go to Sathuragiri Hill till May 1

அந்த வகையில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை நாளை முன்னிட்டு நாளை முதல் மே- 1ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரை மட்டுமே கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து ஏற்பாடு செய்துள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மகாசிவராத்திரியில் மகாலிங்கத்திற்கு அபிஷேகம் - சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிமகாசிவராத்திரியில் மகாலிங்கத்திற்கு அபிஷேகம் - சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி

அதேபோல பக்தர்கள் இரவு நேரங்களில் மலையில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மலைப் பகுதியில் தொடர் மழை பெய்தால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவார்கள் எனவும் கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
According to the temple administration, devotees have been allowed to go for four days till May 1, the day before the Chittirai month of Pradosh and the new moon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X