ஷாக்! நடுரோட்டில் காரை மறித்த 7 பேர்! காட்டுக்குள் கதறி துடித்த 40 வயது பெண்! அலறிய அருப்புக்கோட்டை!
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காரில் சென்ற 40 வயது மதிக்கத்தக்க பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இவ்வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள காளையார் கரிசல்குளத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம் (44). திங்கள்கிழமை மாலை விருதுநகரில் இருந்து காரில் அருப்புக்கோட்டைக்கு சென்றார்.
வழியில் பாலவநத்தம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்த ஏற்கனவே அறிமுகமான நார்த்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை முத்துச்செல்வம் தனது காரில் அழைத்துச் சென்றார்

அதிர்ச்சி
அந்த கார் கோபாலபுரம் - பாலவநத்தம் இடையே சென்ற போது, இயற்கை உபாதையை தணிக்க முத்துச்செல்வம் காரை நிறுத்தினார். அப்போது, அவர்களின் பின்னால் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 7 பேர், முத்துச்செல்வத்தை சரமாரியாகத் தாக்கி கீழே தள்ளினர்.

பலாத்காரம்
பின்னர் முத்துச்செல்வத்துடன் வந்த பெண்ணை தங்களின் காரில் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் பெண் அணிந்திருந்த 5 சவரன் நகை, செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.

தீவிர விசாரணை
இந்தசம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில், விருதுநகர் எஸ்பி மனோகரன் மேற்பார்வையில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து, அருப்புக்கோட்டை நகர் போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட மேலும் 5 பேரை கைது செய்த செய்தனர்.

அதிரடி கைது
இவர்கள் ஐந்து பேரும் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். இரண்டு பேரை தீவிரமாகத் தேடி வருவதால் முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 5 பேரின் பெயர்கள் உள்ளிட்ட தகவல்களை தரவில்லை. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களை விசாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications