கொண்டை மிஸ்ஸிங்.. கூலிங்கிளாஸ்.. மஞ்சள் சேலை.. கையில் ஹெல்மட்.. டூவீலரில் ரைடு.. கலக்கிய நிர்மலாதேவி
கோர்ட்டுக்கு டூவீலரில் நிர்மலாதேவி வந்திருந்தார்
Recommended Video
அருப்புக்கோட்டை: மஞ்சள் கலர் சேலை, கூலிங்கிளாஸ் சகிதம்.. டூவீலரில் அட்டகாசமாக கோர்ட்டில் வந்து இறங்கினார் நிர்மலாதேவி!
கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார் பேராசிரியர் நிர்மலாதேவி. இது சம்பந்தமான வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கின் விசாரணைக்கு இன்றுகூட கோர்ட்டுக்கு ஆஜராஜ வந்திருந்தார் நிர்மலாதேவி. இவரை வரும் 27ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கெட்-அப்
வழக்கமாக ஒவ்வொரு முறை நிர்மலாதேவி கோர்ட்டுக்கு வரும்போதும், ஒவ்வொரு கெட்டப்பில் வருவார். காரில் இருந்து இறங்கிய உடனேயே விறுவிறுவென கோர்ட் படிகளில் ஏறுவார். விசாரணை முடிந்ததும், அதே வேகத்துடன் காரில் ஏறி பறந்துவிடுவார். ஆனால், இன்று அவர் காரில் வரவில்லை. மாறாக.. ஸ்கூட்டியில் வந்து இறங்கினார்.

தனிமை
கோர்ட் விசாரணை முடிந்தவுடன் அவரது வக்கீல் பசும்பொன் பாண்டியன் "செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "ஜாமீனில் வெளியே இருக்கும் நிர்மலா தேவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசியல் மிரட்டல்கள் இருக்கின்றன. சிறையில் அனுபவித்த தனிமை, கொடுமை காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிர்மலா தேவி உரிய சிகிச்சைக்கு பின்பு தெளிவாக இருக்கிறார்" என்ற ஒரு கருத்தையும் தெரிவித்திருந்தார்.

கூலிங் கிளாஸ்
அப்போது வக்கீல் பேசி முடிக்கும்வரை பக்கத்திலேயே நிர்மலாதேவி நின்றிருந்தார். ஏற்கனவே மொட்டை அடித்திருந்ததால், தலைமுடி கொஞ்சம் வளர்ந்து காணப்பட்டது. நேர்த்தியான சேலை அணிந்திருந்த நிர்மலாதேவி, திடீரென கூலிங் கிளாஸ் எடுத்து மாட்டினார்.

ஹெல்மட்
தான் கொண்டு வந்திருந்த டூவீலர் அருகே சென்றவர், அதில் தன் ஹேன்ட்பேக்கை வைத்துவிட்டு, மறக்காமல் ஹெல்மெட்டை எடுத்து மாட்டிக் கொண்டார். இதனை அங்கிருந்த செய்தியாளர்கள் படம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டு பறந்துவிட்டார் நிர்மலா!


Click it and Unblock the Notifications
