வீட்டுக்கு ஒரு கார் என்ன? ஹெலிகாப்டரேகூட தரட்டும்.. தினகரன் கட்சி ஆட்டத்துலயே இல்லை.. அமைச்சர் கலாய்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிபுத்தூர்: வீட்டுக்கு ஒரு கார் என்ன, ஹெலிகாப்டரே கூட கொடுத்தாலும் தினகரன் ஜெயிக்க மாட்டார். ஏன்னா அவர்தான் ஆட்டத்துலயே இல்லையே என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலாய்த்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்காசி நாடாளுமன்ற வேட்பாளரை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. இதில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ஏராளமான கட்சியினரை சேர்த்து கொண்டு ஏராளமான பிரதமர் வேட்பாளர்களின் பெயரை சொல்லி வாக்குக் கேட்கிறார்கள். ஆனால் சவால் விட்டு கூறும் ஒரே பிரதமர் மோடி மட்டுமே.

களத்தில் இல்லை

களத்தில் இல்லை

அமமுக களத்திலேயே இல்லையே. அந்த கட்சி நேற்றுதான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் என்ன வேணாலும் இருக்கட்டும். தனி சேட்டிலைட், ஸ்கார்பியோ கார், வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் என எதை வேண்டுமானாலும் அறிவிக்கட்டும். அந்தக் கட்சிதான் களத்திலேயே இல்லையே.

தினகரன்

தினகரன்

தங்கதமிழ்ச்செல்வன் அங்க போய் மாட்டிக்கிட்டார். இப்போ அவரால் எங்கும் போக முடியாமல் தவிக்கிறார். டிடிவி தினகரன் அணி தேய்ந்துகிட்டே இருக்கிறது. தேனியில் தான்கூட போட்டியிடலாம் என தினகரன் அறிவித்தார்.

ரூ. 20 டோக்கன்

ரூ. 20 டோக்கன்

ஆனால் கடைசியில் அவர் போட்டியிடவில்லை. அவருக்கு நன்றாக தெரியும். வெத்து ரூ. 20 டோக்கனை கொடுத்து ஆர் கே நகர் மக்களை ஏமாற்றியது போல் தேனி மக்களையும் ஏமாற்ற முடியாதுனு. விரைவில் அமமுகவுக்கு மூடுவிழா நடத்தப்படும். அங்கிருப்பவர்கள் மீண்டும் அதிமுகவுக்கே வந்துவிடுவர்.

கூட்டம் கூட்ட முடியுமா?

கூட்டம் கூட்ட முடியுமா?

கமல்ஹாசன் கட்சிக்காரர்களை எங்கேயாவது பார்க்க முடிகிறதா. அவங்க 10-க்கு 10 அறையில் ஆலோசனை நடத்தி வேட்பாளர்களை அறிவிக்கிறாங்க. இந்த அளவுக்கு கமல்ஹாசன் கூட்டத்தை கூட்டமுடியுமா என ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+