இரவோடு இரவாக ராஜபாளையத்தில் நடந்த மாற்றம்.. நம்பிக்கையில் ராஜேந்திர பாலாஜி

Subscribe to Oneindia Tamil

ராஜபாளையம்: தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழகத்தில் அடுத்து யாருடைய ஆட்சி நடைபெறும் என்ற கேள்வி அனைத்து மக்கள் மனதிலும் எழுந்துள்ளது.

மீண்டும் ஆட்சிக்கு யார் வருவார்கள் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க நட்சத்திர தொகுதியான இராஜபாளையம் தொகுதியில் இரவோடு இரவாக அதிரடி மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.

Rajendrabalaji is hopeful for his victory

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், தொகுதி மக்களின் மனநிலையை கனிப்பது சற்று கடினமான விஷயமாக இருந்தது, ஆனால் இரவோடு இரவாக தொகுதி நிலவரம் 100% அதிமுகவிற்கு ஆதரவாக மாறியுள்ளதாம்.

ராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், திமுக சார்பில் தங்கபாண்டியனும் போட்டியிடுக்கின்றனர், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி குறித்து வெளியான பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் தொகுதியில் இழுபறி நீடிப்பதாகவும், இரண்டு கட்சிகளுக்கு இடையேயான வாக்கு 5 ஆயிரத்திற்கு குறைவாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டது.

ஆனால் சுதாரித்துக் கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முழுமையாக களத்தில் இறங்கி பணியாற்றியதுடன், நிர்வாகிகளை முறையாக கையாண்டு, தனது பிரச்சாரம் அனைத்து ராஜபாளையம் மக்களுக்கும் செல்லவேண்டும் என சமூக ஊடகங்களை முறையாக கையாண்டு அதிரடி காட்டினார். இதெல்லாம் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அமைச்சர் தரப்பு நம்பிக்கையுடன் சொல்கிறது.

மேலும் ராஜபாளையமே எனது ராஜ ஆலயம் என தீவிரமாக பணியாற்றி வருகிறார் ராஜேந்திர பாலாஜி. அதிமுகவினர் செல்லாத இடங்களே தொகுதியில் இல்லை என்ற நிலை கடந்த மூன்று நாட்களில் அரங்கேறியுள்ளது தெளிவாக ராஜபாளையம் பகுதியில் தெரியவந்துள்ளது. அமைச்சர் தொகுதி என்பதால் வெற்றி பெற்றால் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை தொகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

ராஜபாளையம் தொகுதியை பொறுத்தமட்டில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறைந்தது 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பதில் எந்த மாற்றும் இல்லை என்று அதிமுகவினர் அடித்துச் சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+