எங்களுக்கு சாதி இல்லை மதம் இல்லை! சர்டிஃபிகேட் வாங்கிய விருதுநகர் தம்பதி! குழந்தைகளுக்கும் அதேதான்!
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தங்களுக்கு சாதியும் இல்லை மதமும் இல்லை என சான்றிதழ் வாங்கியுள்ள தம்பதியினர், தங்களது இரு குழந்தைகளுக்கும் சாதி மதம் இல்லை என சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசிஅருகே உள்ள தேவர்குளம் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். பட்டதாரி இளைஞரான இவர் கணினி பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் தனக்கும், தனது மனைவி சர்மிளாவுக்கும் சாதி, மதம் அற்றவர்கள் சான்றிதழ் வேண்டும் என்று விண்ணப்பம் கொடுத்துள்ளார்.

சாதி இல்லை என சான்றிதழ்
அப்போது, விண்ணப்பத்தை பெற்ற அதிகாரிகள், இதுவரை இப்படி சான்றிதழ் இந்த தாலுகா அலுவலகத்தில் யாருக்கும் கொடுத்தது இல்லை என கூறியுள்ளனர். அப்போது காத்திகேயன், இந்தியாவில் இதுவரை 7 பேர் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழ் பெற்றுள்ளார்கள்.

சாதி, மதம் அற்றவர்கள்
அதில் 6 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறி அதற்கான ஆதாரத்தையும் காட்டியுள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி கார்த்திகேயன், அவரது மனைவி சர்மிளா ஆகிய இருவருக்கும் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழை வழங்கி உள்ளனர்.

இரு குழந்தைகள்
எங்களுக்கு 2 குழந்தைகள் மூத்த மகன் நேசன் (4) தற்போது தனியார் பள்ளி ஒன்றில் யு.கே.ஜி. படித்து வருகிறான். அவனுக்கும் சாதி,மதம் அற்றவர் என்ற சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறேன். மேலும் 2வது மகன் கரிகாலனுக்கு தற்போது 2 வயது தான் ஆகிறது.

பாராட்டுகள் குவிகிறது
அவனுக்கும் இதே சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளேன் என தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக. கோவையைச் சேர்ந்த பெற்றோர் ஒருவர் தனது பெண் குழந்தைக்கு சாதி, மதம் இல்லாமல் சான்றிதழ் வாங்கியுள்ளனர். தற்போது தம்பதி ஒருவரும் இதுபோன்று தங்களுக்கு சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழ் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாதி மதம் இல்லை என சான்றிதழ் பெற்ற தம்பதியினருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications