யாரும் தலையிடகூடாது! முதல்வரை சந்தித்து பட்டினபிரவேசம் நடத்தியே தீருவோம்! சடகோப ராமானுஜ ஜீயர் உறுதி
விருதுநகர் : தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி என்பது குருவை தூக்கி கொண்டாடும் விசயம் , இதில் யாரும் தலையிடக்கூடாது எனவும், கண்டிப்பாக பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை நடத்தியே தீருவோம் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் உறுதிபட கூறியுள்ளார்.
Recommended Video
தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வானது இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பால் ஆதினத்தை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதினத்தின் பட்டினப் பிரவேச நிகழ்வு அப்பகுதியில் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

பட்டின பிரவேசம் நிகழ்ச்சி
இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி என்பது குருவை தூக்கி கொண்டாடும் விசயம் , இதில் யாரும் தலையிடக்கூடாது எனவும், கண்டிப்பாக பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை நடத்தியே தீருவோம் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் உறுதிபட கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பட்டின பிரவேசம் செய்ய தடை விதித்திருப்பது மனவேதனை அளிக்கிறது. ஆதீனங்கள் விஷயத்திலும் மடாதிபதிகள் விஷயத்திலும் கோயில் விஷயத்தில் யாரும் தலையிட்டு இதைச் செய்ய கூடாது அதைச் செய்ய கூடாது என கூற அதிகாரம் இல்லை

சடகோப ராமானுஜ ஜீயர்
பட்டினப்பிரவேசம் சம்பந்தமாக ஆதீனங்கள் மடாதிபதிகள் முதல்வரை சந்தித்து பேச உள்ளோம். தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது இதுபோன்று ஆன்மீக விஷயத்தில் தலையிடுவதால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் உண்டாகி வருகிறது. உறுதியாக தமிழக அரசு இதை ஏற்றுக்கொண்டு பட்டினப் பிரவேசத்திற்கு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம்.

யாரும் தலையிடக்கூடாது
குருவை தூக்கி கொண்டாடும் விசயம் இது.இதில் யாரும் தலையிடக்கூடாது கண்டிப்பாக நடத்தியே தீருவோம். செண்டலங்கார ஜீயர் அமைச்சர்களை நடமாட முடியாது எனக் கூறியது அது அவருடைய சொந்தக் கருத்து. மதுரை ஆதீனம் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பது குறித்து தமிழக அரசுக்கு தெரிவித்து பாதுகாப்பு கேட்டு முறையிட வேண்டும்.

கருப்பு புள்ளிகளால் கெட்ட பெயர்
திமுகவுக்கு அவருடன் இருக்கும் சிலர் கருப்பு புள்ளிகளால் கெட்ட பெயர் ஏற்படுகிறது. தோளில் சுமப்பது குறித்த விமர்சனத்திற்கு - கிரிக்கெட் வீரர் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றவுடன் தூக்கிச் சென்று தோளில் சுமக்கிறார்கள். மத விவகாரங்களில் இதைச் செய் அதைச் செய் என யாரும் தலையிட உரிமை கிடையாது" என்று ஜீயர் தெரிவித்தார்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications