ஈரோடு இடைத்தேர்தல்.. வேட்பாளர் அறிவிப்பு எப்போது? குலதெய்வ வழிபாட்டுக்கு பின் ஓபிஎஸ் சொன்ன பதில்!
எங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து வேகம் காட்டி வரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் தேர்வில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்தது. திமுக கூட்டணி சார்பாக மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அதிமுக நிலை
ஆனால் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித் தனியாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் வேட்பாளர்களை நிறுத்த நிர்வாகிகள் திட்டமிட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இபிஎஸ் தரப்பில் தேர்தல் பணிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர் தென்னரசு?
அதில் முன்னாள் அமைச்சர் கேவி ராமலிங்கம் பெயர் இடம்பெற்றுள்ளதால், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் அடுத்தடுத்து பணிகளும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேரடியாக ஈரோடு வந்த இபிஎஸ், முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளார்.

விரைவில் அறிவிப்பு
இதற்கிடையே, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பக தோப்பு பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அவரது குலதெய்வ கோயிலான வன பேச்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு வரும் 31ம் தேதி முதல் தொடங்குகிறது. எங்கள் தரப்பில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

பாஜக நிலைப்பாடு
கடந்த சில நாட்களாக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறுவதில் ஓபிஎஸ் மும்முரம் காட்டி வந்தார். குறிப்பாக பாஜகவின் ஆதரவை பெறுவது யார் என்பதில் இரு தரப்புக்கும் போட்டி நிலவியது. ஆனால் இதுவரை பாஜக தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால் பாஜகவின் நிலைப்பாட்டை பொறுத்தே ஓபிஎஸ்-ன் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications