நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டும் தமிழகம் முன்னேறி விடுமா ?.. கமல்ஹாசன் பகீர் பிரச்சாரம்!
நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டும் தமிழகம் முன்னேறி விடுமா என்று கமல்ஹாசன் பிரச்சாரத்தில் பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்: நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டும் தமிழகம் முன்னேறி விடுமா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார்.
இன்று அவர் விருதுநகர் வேட்பாளர் முனுசாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். சாத்தூரில் பேசிய அவர் நீட் தேர்வு குறித்தும், அதில் திமுக எடுத்திருக்கும் எதிர்ப்பு நிலைப்பாடு குறித்தும் வெளிப்படையாக பேசினார்.

கமல் தனது பிரச்சாரத்தில், சில கட்சியினர், நாங்கள்தான் நீட்டிக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தோம். அதனால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்கிறார்கள்.
அவர்கள் அப்படி வாக்கு கேட்பது நல்ல விஷயம்தான் . நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை டெல்லியில் இருந்து வந்து நீக்கி...எல்லாம் நடக்கட்டும் . ஆனால் இப்போது அதை ஏன் சொல்கிறீர்கள்?, அதை முன்பே சொல்லி இருக்கலாம் அல்லாவா?
குழந்தை ஒன்று சாகும் முன்பே சொல்லி இருக்கலாமே. சரி கேட்கிறேன், நீங்கள் சொல்வது போல நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டும் தமிழகம் முன்னேறி விடுமா? உங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி நிட்டை எடுத்துவிட்டால் தமிழகம் முன்னேறிவிடுமா?
அது மட்டுமா முக்கியம்.. படிக்கின்ற பிள்ளைக்கு நல்ல உணவு வேண்டாமா? நல்ல குடிநீர் வேண்டாமா?. அதை எல்லாம் இவர்கள் செய்ய மாட்டார்கள். அதை பற்றி பேச மாட்டார்கள் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழகமே நீட் தேர்வை எதிர்த்து பேசி வருகிறது. ஆனால் கமல்ஹாசன் நீட் தேர்வு குறித்து இப்படி கருத்து சொல்லி இருப்பது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications