வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 கோடி பேரு ஓட்டு போட்டாச்சு.. இன்னும் 6 கோடி பேருதான் பாக்கி.. விழாக்கோலத்தில் அமெரிக்கா!

அதிபர் தேர்தலில் இன்னும் 6 கோடி பேர் ஓட்டு போட வேண்டும்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவே திருவிழாக் கோலம் பூண்ட மாதிரி காணப்படுகிறது. அங்கு இன்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

வாக்குப் பதிவு என்பது அமெரிக்காவில் வித்தியாசமாக நடைபெறும். அதிகாரப்பூர்வமற்ற வகையில் வாக்குப் பதிவு ஏற்கனவே தொடங்கி முக்கால்வாசிப் பேர் ஓட்டும் போட்டு விட்டனர். இன்று அதிகாரப்பூர்வமான வாக்குப் பதிவு நாள்.

3ம் தேதியான இன்று மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு நேரில் வந்து வாக்களிக்கவுள்ளனர். மொத்த வாக்காளர்களில் கிட்டத்தட்ட 10 கோடிப் பேர் தபால் மூலமும் நேரில் வந்தும் வாக்களித்து விட்டனர். இன்று மிச்சமுள்ள 6 கோடிப் பேரும் வாக்களிக்கவுள்ளனர்.

அமெரிக்க தேர்தல்.. களைகட்டியது கமலா ஹாரீஸ் சொந்த ஊர்.. வெற்றிக்காக அய்யனார் கோவிலில் சிறப்பு பூஜை அமெரிக்க தேர்தல்.. களைகட்டியது கமலா ஹாரீஸ் சொந்த ஊர்.. வெற்றிக்காக அய்யனார் கோவிலில் சிறப்பு பூஜை

 வாக்கு பதிவு

வாக்கு பதிவு

கொரோனா பீதி காரணமாக பலர் தபால் வாக்குகளைத் தேர்வு செய்து வாக்களித்துள்ளனர். இதனால் வாக்குகளை எண்ணும் பணி சற்று கடினமாகவுள்ளது... இதனால் வாக்குப் பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தெளிவான முடிவு தெரிய வாய்ப்பில்லை... சற்று கால தாமதமாகவே முடிவுகள் தெரிய வரும்.

டிரம்ப்

டிரம்ப்

அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியில் உள்ளார்... அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் களம் கண்டுள்ளார்... துணை அதிபர் தேர்தலில் மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் களம் கண்டுள்ளார்.

 வால்மார்ட்

வால்மார்ட்

தேர்தலில் முறைகேடுகள் நடக்கலாம் என்ற பொதுவான அச்சமும் உள்ளது.. டிரம்ப் தோல்வி முகத்தில் இருந்தால் பிரச்சினை செய்வார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது... ஏன் உள்நாட்டுக் கலகம் கூட மூளலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.. இதனால்தான் வால்மார்ட் தனது கடைகளிலிருந்து துப்பாக்கி வியாபாரத்தையே நிறுத்தி விட்டது.

மாகாணங்கள்

மாகாணங்கள்

ஜோ பைடன் வெல்வார் என்று பொதுவான கருத்துக் கணிப்புகள் கூறினாலும் முடிவு தெரியும் வரை எல்லாமே குழப்பமாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.. பல முக்கிய மாகாணங்களில் பைடனே முன்னணியில் உள்ளார்... அதேசமயம், பெரிய வித்தியாசம் இல்லை அவருக்கும், டிரம்ப்புக்கும்.

 கிளிண்டன்

கிளிண்டன்

அதிபர் தேர்தலில் வெற்றி பெற எலக்டோரல் வாக்குகளில் 50 சதவீதத்தைப் பெற்றாக வேண்டும். அப்படி வாங்கித்தான் கடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.. மக்கள் வாக்குகளை அதிகம் பெற்றும் கூட எலக்டோரல் வாக்குகள் கிடைக்காமல் போனதால்தான் கடந்த தேர்தலில் ஹில்லாரி கிளிண்டன் தோற்றுப் போனார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
10 crore Americans have already voted, another 6 crore likely to vote today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X