வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'9 வயதில் முதல் நிறுவனம், 10 வயதில் கோடீஸ்வரி..' ஆஸ்திரேலியாவை கலக்கும் க்யூட் சிறுமி பிக்ஸி கர்டிஸ்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வெறும் 10 வயதில் இரண்டு நிறுவனங்களை நடத்திப் பல லட்சம் டாலர்களை சம்பாதித்து வருகிறார் இந்த ஆஸ்திரேயில சிறுமி.

பொதுவாக குழந்தைகள் 10-12 வயதில் என்ன செய்வார்கள். பள்ளிக்குச் செல்வார்கள், வீடுகளில் இருக்கும் விளையாட்டுப் பொருட்களை வைத்து விளையாடுவார்கள்.

ஆனால், இந்த சிறுமி வெறும் 10 வயதில் சொந்தமாகவே 2 நிறுவனங்களை நடத்தி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார்.

'கல்வி தான் ஒரே ஆயுதம்..' கணக்கில் சந்தேகம் கேட்ட சாலையோர சிறுமி.. பாடம் எடுத்த போலீஸ்.. நெகிழ்ச்சி!'கல்வி தான் ஒரே ஆயுதம்..' கணக்கில் சந்தேகம் கேட்ட சாலையோர சிறுமி.. பாடம் எடுத்த போலீஸ்.. நெகிழ்ச்சி!

 10 வயது சிறுமி

10 வயது சிறுமி

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 10 வயது சிறுமி பிக்ஸி கர்டிஸ். இவர் அங்குள்ள தொடக்கப் பள்ளியில் படித்து வருகிறார். இருப்பினும், பள்ளிக்குச் சென்று வந்த பிறகு ஓய்வு நேரத்தை விளையாடிக் கழிக்கவில்லை. மாறாக விளையாட்டுப் பொருட்களையே உருவாக்கும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கவிட்டார் பிக்ஸி கர்டிஸ். அதுவும் வெறும் 9 வயதில்! இந்த நிறுவனம் மூலமாகவே அவருக்குப் பல லட்சம் டாலர் வருமானம் வருகிறது.

 வெறும் 48 மணி நேரம்

வெறும் 48 மணி நேரம்

பிக்ஸி கர்டிஸ் தனது தாயான ராக்ஸி ஜசென்கோவுடன் இணைந்து இந்த பொம்மை தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். பிக்சிஸ் ஃபிட்ஜெட் (Pixie's Fidgets) என்ற இந்த நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட முதல் டாய்ஸ்கள் வெறும் 48 மணி நேரத்தில் முற்றிலுமாக விற்று தீர்ந்துவிட்டன. அதன் பின்னரும் இவர்கள் நிறுவனத்தில் இருந்து வரும் டாய்ஸ்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 2ஆவது நிறுவனம்

2ஆவது நிறுவனம்

பிக்ஸி கர்டிஸ் இத்துடன் நிற்கவில்லை. தனது 10ஆவது வயதில் அவர் Pixie's Bows என்ற குழந்தைகளுக்கான டைகளை விற்கும் மற்றொரு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்திற்கும் அந்நாட்டுக் குழந்தைகளிடம் பெரும் வரவேற்பு கிடைக்கிறது. இது மட்டுமின்றி பிற நிறுவனங்களின் விளையாட்டுப் பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரத்தையும் இவர்கள் செய்து வருகின்றனர். இதன் மூலம் வெறும் 10 வயதில் பல லட்சம் டாலர்களுக்கு அதிபதியாக மாறியுள்ளார் இந்த சிறுமி.

 15 வயதில் ஓய்வு

15 வயதில் ஓய்வு

10 வயது சிறுமி பிக்ஸி கர்டிஸின் தாய் ராக்ஸி ஜசென்கோயும் இதேபோல பல்வேறு சிறு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இப்போது இருக்கும் சூழலைப் பார்த்தால் நான் 100 வயது வரை வேலை செய்ய வேண்டும் போல. அவள் விரும்பினாள் 15 வயதில் ஓய்வு பெறலாம். இந்த வயதிலேயே அவள் புத்திசாலியாக உள்ளார். ஆனாலும், இந்த சிறு வயதில் அவளுக்கு அழுத்தம் தர நாங்கள் விரும்பவில்லை. அவள் மகிழ்ச்சியாகவே தனக்குப் பிடித்த வேலைகளைச் செய்கிறார்" என்றார்.

எப்படி

எப்படி

பிக்சிஸ் ஃபிட்ஜெட் நிறுவனத்தில் இருந்து வரும் ஒவ்வொரு பொம்மைகளுக்கும் பெரியளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. பிக்ஸி கர்டிஸ் குழந்தையாக உள்ளதால் தன் வயதில் உள்ள குழந்தைகளுக்கு என்ன மாதிரியான விளையாட்டுப் பொருட்கள் பிடிக்கும் என்பதை எளிதாக அடையாளம் காண முடிகிறது. இதனாலேயே இவர்கள் வெளியிடும் ஒவ்வொரு பொம்மைகளும் வெறும் சில மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்துவிடுகிறது.

English summary
10-year-old Australian girl started a toy company called Pixie Curtis. Australian girl become multimillionaire by her own company.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X