Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரலாற்றில் இதுவரை இல்லாத மோசமான அதிபர் டொனால்ட் டிரம்ப்.. கருத்துக்கணிப்பில் தகவல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஃபாக்ஸ் நியூஸ் நடத்திய புதிய கருத்துக் கணிப்பில் 42% வாக்காளர்கள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை மிக மோசமான அதிபர்களில் ஒருவராக நினைப்பதாக கூறி உள்ளார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த டொனால்டு டிரம்ப்பின் பதவி காலம் வரும் ஜனவரி 20ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய அதிபராக ஜோ பிடன் வரும் ஜனவரி 20ம் தேதி எளிமையாக பதவி ஏற்க உள்ளார்,

இந்நிலையில் அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் நடத்திய புதிய கருத்துக் கணிப்பில் 42% வாக்காளர்கள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை மிக மோசமான அதிபர்களில் ஒருவராக நினைப்பதாக கூறி உள்ளார்கள்.

22 சதவீதம் பேர்

22 சதவீதம் பேர்

அதேநேரம் டொனால்டு டிரம்பை மிகசிறந்த அதிபர் என 22% பேரும் கருத்து கூறியிருக்கிறார்கள், 16% பேர் சராசரியை விடவும், 10% பேர் சராசரிக்கும் கீழானவர் என்றும் கூறுகிறார்கள்.

வரலாற்றில் மோசம்

வரலாற்றில் மோசம்

இந்த கணிப்பால் என்ன பயன்: டிரம்ப் பதவியில் இருந்து விலகப்போகும் நாட்கள் நெருங்கிவிட்ட நிலையில் , வரலாற்றாசிரியர்களும் அமெரிக்கர்களும் ஒரே மாதிரியாக டிரம்பை மோசமானவர் என்ற பார்வையில் வைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் சில ஆண்டுகளில் டிரம்பை பற்றி அவர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பது மாறக்கூடும்.

டிரம்ப் மீதான பார்வை

டிரம்ப் மீதான பார்வை

இருப்பினும், வரலாற்றாசிரியர்களோ, நிறைய வாக்காளர்கள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ட்ரம்பை எப்போதுமே மோசமானவர்களில் ஒருவராக நினைவில் கொள்வார்கள் என்று நம்புகிறார்கள். அதே நேரத்தில் ஒரு சிறிய அளவிலான வாக்காளர்கள் அவரை எப்போதும் சிறந்தவர் என்றே பார்ப்பார்கள் என்று கூறுகிறார்கள்.

பராக் ஒபாமா

பராக் ஒபாமா

எந்தவொரு அதிபரும் டிரம்ப்பைப் போன்று வாக்காளர்களிடம் நெகட்டிவ்வான இமேஜை பெறவில்லை. ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷை 36% மோசமானவர் என்று கூறினார்கள். ஆனால் டிரம்பை அதைவிட அதிகமாக 42 சதவீதம் பேர் மோசமான அதிபர் என்று கூறியிருக்கிறார்கள். பராக் ஒபாமாவை மிக மோசமான அதிபர்களில் ஒருவர் என வெறும் 17 சதவீதம் பேர் மட்டுமே கூறியிருந்தனர் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+